புது 500 ரூபாய் நோட்டு.. கட்டு கட்டாக வேண்டும்! ரிசர்வ் வங்கியிடம் போன தமிழ்நாடு அரசு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆர்பிஐயிடம் புதிய 500 ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. இரண்டு காரணங்களுக்காக இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

Why is the Tamil Nadu government asking 500 notes from RBI ahead of Rs.6000 relief fund in Ration Shops?

நிவாரண தொகை அறிவிப்பு இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்: சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்:

கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்:

என்னென்ன நிவாரணம்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: எருது. பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக m.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்:

படகுகள் நிவாரணம்: சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட). ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

டோக்கன்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ₹6,000 நிவாரணம் வழங்க டிச.16 முதல் டோக்கன் வழங்கப்படும். வீடு வீடாக மாநகரட்சி அதிகாரிகள் டோக்கன்களை வழங்குவார்கள். ரேஷன் கடை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும்.

அதன்பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் , எந்த நேரத்திற்கு வர வேண்டும், எந்த ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.

புதிய 500 ரூபாய் நோட்டு: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆர்பிஐயிடம் புதிய 500 ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. இரண்டு காரணங்களுக்காக இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

1. அதன்படி 6000 ரூபாய் நிவாரண தொகையை கொடுக்க வேண்டும் என்றால் 2000 ரூபாய் நோட்டு இல்லை. 500 ரூபாய் நோட்டுகள் 12 கொடுக்க வேண்டும். இதற்காக பணம் தேவை.

2. பொங்கல் பரிசு தொகைக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுக்க திட்டம் உள்ளது. அதாவது 1000 ரூபாய் கொடுக்க திட்டம் உள்ளது. அதற்கும் பணம் தேவை. இந்த இரண்டு காரணங்களை முன்னிட்டு பணம் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் தமிழ்நாடு அரசு அணுகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+