வங்கக் கடலில் திடீர் மாற்றம்.. வங்கக்கடலில் அடங்காத "கொடூரன்"..என்னாது, இன்னும் ஒரு வாரமா? போச்சுடா
சென்னை: வங்கக்கடலில், புயலின் தாக்கம் ஓயவில்லை என்றும், முகத்துவார பகுதிகளில் வெள்ள நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை கிடைத்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், புயல் வந்துவிட்டது.. வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயலானது, சென்னையையே புரட்டி போட்டுவிட்டு சென்றுவிட்டது.

திருவள்ளூர்: தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தியது.. ஆனால், 2 நாட்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்துவிட்டது.. இதனால், சென்னையில் மழை விட்டாலும், இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. ஆனால், அதற்குள் இன்னொரு புயல் தாக்கக்கூடும் என்று செய்திகள் பரவின.. ஆனால், இதெல்லாம் வதந்திகள் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில், புயலின் தாக்கம் ஓயவில்லை என்றும், முகத்துவார பகுதிகளில் வெள்ள நீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேராசிரியர் ராமச்சந்திரன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், கடலின் கொந்தளிப்பு ஏன் இன்னமும் குறையவில்லை என்பது குறித்தும் விளக்கியுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
வங்கக்கடல்: "பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் புயல், குறிப்பிட்ட திசையில் பயணித்து, எங்கே கரையை நெருங்குகிறதோ, அங்கேயே கரையை கடக்கும்.. ஆனால், இந்த மிக்ஜாம் புயல், அந்தமான் அருகே உருவானாலும், சென்னையை நெருங்கி வந்து, இங்கு கரையை கடக்காமல், வடக்கில் திரும்பி ஆந்திராவில் கரையை கடந்துள்ளது.
இதனால், பூமத்தியரேகை அருகில் உருவாகும் புயல்களின் வெளிச்சுற்று பகுதி, எப்போதுமே கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் அதிவேகத்தில் சுற்றும். இது புயலின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ சுற்றளவுக்கு சூறாவளியாக வீசுவதுடன், கடுமையான தாக்கத்தை, கடலிலும், நிலத்திலும் ஏற்படுத்திவிடும்.
ராட்சத அலைகள்: அதனால்தான் 13 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்தவாறே உள்ளன.. இப்படி அதிக அலைகள் எழும் நேரத்தில், நிலத்தில் இருந்து வரும் வெள்ள நீரை, கடல் உள்வாங்குவதிலும் தாமதம் ஏற்படும்.... அதனால்தான், புயல் கரையை கடந்தாலும், கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது.. இன்னும் ஒரு வாரத்துக்கு கடலில் ராட்சத அலைகள் ஏற்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications