ஒரு சொட்டு மழை இல்லை! சைலண்ட் ஆக நடந்த சம்பவம்.. காரணம் இதுதானாம்.. தமிழ்நாடு வெதர்மென் விளக்கம்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து இன்று காலை 7 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர் அருகே கரையை கடந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டநிலையில், சைலண்ட் ஆக காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது ஏன்? என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் கனமழை வெளுத்து கட்டியது. கடந்த 2 தினங்களாக சென்னை மக்கள், எப்போது மழை நிற்கும் என நினைக்கும் அளவுக்கு கனமழை கொட்டியது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று இன்று அதிகாகாலை நெல்லூர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையக் கடப்பதால் சென்னையை மழை மிதக்க வைத்துவிடும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ஏற்கனவே, சென்னையை வெள்ளக்காடாகிவிட்ட நிலையில், இரவில் எப்படி மழை பெய்யபோகுதோ என நினைத்த மக்களுக்கு, அவர்கள் அச்சப்பட்ட அளவுக்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நேற்று காலையில் இருந்தே பெரிதாக மழை இல்லை. பல இடங்களில் வெயில் தலை காட்ட தொடங்கியது. இப்படி வானிலை திடீர் ட்விஸ்ட் கொடுத்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நேற்று முன்தினம் காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின்னர் நேற்று காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து இன்று காலை 7 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர் அருகே கரையை கடந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டநிலையில், சைலண்ட் ஆக காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது ஏன்? என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- நேற்று மதியத்தில் இருந்து ஒரு சொட்டு மழை இல்லை. காற்றழுத்த தாழ்வு பகுதி, மேகங்கள் இன்றி நெல்லூர் அருகே கரையைக் கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததும் யாருக்குமே தெரியவில்லை. ஏனேனில், மேகங்கள் எதுவும் இன்றி, கரையைக் கடக்கும் போது வெளிச்சமும் அதிகமாக இருந்தது. சென்னையில் வெயில் இன்று நன்றாக இருக்கும். மேற்கு பகுதியில் இருந்து இன்று அவ்வப்போது காற்று வீசும். எனவே, இன்று வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று மாலை முதல் நாளை காலை வரை இதை எதிர்பார்க்கலாம். மேகங்கள் நிலப்பகுதியை நோக்கி நகர்கிறது. கடல் பகுதியை நோக்கி அல்ல. சென்னை, பாண்டிச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகை ஆகிய பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். இயல்பான மழையே இருக்கும். சில இடங்களில் மழை இருக்கலாம். சில இடங்களில் மழை இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications