சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய திடீர் மழைக்கு காரணம் என்ன?.. வானிலை மையம் விளக்கம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடியுடன் மழை பெய்தது ஏன் என்பது குறித்து வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்றைய தினம் இரவு நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

அதிலும் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், ஆவடி ,பூந்தமல்லி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கொரட்டூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த திடீர் மழை ஒரு பக்கம் ஆச்சரியத்தை அளித்தாலும் இரவு முழுவதும் மிரட்டும் மின்னல்களும் காதை பிளக்கும் இடி சப்தமும் கேட்டதால் ஏதோ புயல் தோன்றியது போன்ற ஒரு அச்சம் பொதுமக்களிடையே நிலவியது. சென்னையை போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
விடிய விடிய மழை பெய்ததால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாணவர்களின் தலையில் ஒரு "இடியை" இறக்கினர். இரவு முழுவதும் அவர்கள் செய்த பிரார்த்தனை வீணானது.
இந்த நிலையில் இன்றைய தினம் வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 14 செ.மீ. மழையும் திரூரில் 12 செ.மீ மழையும் செம்பரம்பாக்கத்தில் 7 செ.மீ.மழையும் பெய்தது.
அதிபட்சமாக பாளையம்கோட்டையில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும். அதிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் நேற்று இரவு சென்னையில் திடீர் இடியுடன் மழைக்கு காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பாலசந்திரன் கூறுகையில் மேற்கு திசை காற்றும், வடக்கு திசை காற்றும் சந்தித்து கொண்டதால் வடதமிழகத்தில் மழை பெய்தது. அத்துடன் வளி மண்டலத்தில் கீழக்கும் மேலடுக்கும் இடையே நிலைத்தன்மை குறைந்து இடி மேகக்கூட்டங்கள் மின்னல் உருவாகின. பின்னர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கடல் பகுதியில் மையம் கொண்டு தீவிரம் அடைந்து நகர்ந்தது. தென் மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. அதனாலும் தென் மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது என விளக்கினார். மேலும் கீழ் காற்று மேல் காற்று, கிழக்கு திசை காற்று, வடக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று என எல்லாமே ஒரு சேர சேர்ந்ததும் மழைக்கு காரணமாகும் என்றார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications