தஞ்சை டூ கன்னியாகுமரி வரை.. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதனால் வெயில் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

weather tamil nadu rain

மார்ச் 2ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 4, 5ம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

இன்று (27-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (28-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 -25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் 27ம் தேதி முதல் மார்ச் 1 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 2 மற்றும் 3ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

இன்றும் நாளையும் தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 1 முதல் 3 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: இன்றும் நாளையும் எச்சரிக்கை ஏதுமில்லை. மார்ச் 1ம் தேதி தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 2ம் தேதி லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 3ம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில்

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 3 செ.மீ

ராமேஸ்வரம் (ராமநாதபுரம்)
தங்கச்சிமடம் (ராமநாதபுரம்)
ஊத்து (திருநெல்வேலி)
பாபநாசம் (திருநெல்வேலி)
திருநெல்வேலி AWS (திருநெல்வேலி)
நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 2 செ.மீ

காக்காச்சி (திருநெல்வேலி)
சேர்வலாறு அணை (திருநெல்வேலி)
ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்)
பாம்பன் (ராமநாதபுரம்)
நாங்குனேரி (திருநெல்வேலி)
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி)
பாளையம்கோட்டை (திருநெல்வேலி)
கோவில்பட்டி (தூத்துக்குடி)
திருநெல்வேலி (திருநெல்வேலி)
மணிமுத்தாறு (திருநெல்வேலி)
கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி)
ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி)
மாஞ்சோலை (திருநெல்வேலி)
கமுதி ARG (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ என மழை பெய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+