இந்த 7 விஷயங்கள்தான்.. எல்லாத்தையும் மாற்றும்.. வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்!புயலாக மாறுமா?
சென்னை: வங்கக்கடலில் நவ.23ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி நவ.25ல் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நவ.26ஆம் தேதி தமிழ்நாட்டில் கன முதல் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த தாழ்வு மையம் மண்டலமாக மாறிய பின் புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான சாத்தியங்கள் என்னென்னெ என்று இங்கே பார்க்கலாம்.

பொதுவாக புயல் உருவாவது எப்படி?; பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்.
1, இந்த தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
2, அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது மழைக்காலம் என்றாலும் கூட.. இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
3. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறு. எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
4. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
5. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
6.வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும்.
7. இப்போது மழைக்காலம் என்பதால் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இதில் பெரும்பாலான விஷயங்கள் தற்போது புயலுக்கு சாதகமாக உள்ளது. மற்ற விஷயங்கள் தாழ்வு மண்டலம் உருவான பின்பே தெரியும்.
இதனால் புயல் உருவாகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அடுத்த வாரமே இது முழுமையான புயலாக மாறுமா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications