Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விடாமல் துரத்தும் மழை.." இன்றாவது இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்குமா.. வெதர்மேன் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசியக் கோப்பையில் சூப்பர் 4இல் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நேற்று மழையால் தடைப்பட்ட நிலையில், இன்றாவது போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதற்குத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.

ஆசியாவில் இருக்கும் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை இப்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா தயங்கிய நிலையில், இந்தியாவின் போட்டிகள் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டன.

 Will India Pakistan match happen today as there is still Rain possibility what Tamilnadu weatherman says

அதன்படி க்ரூப் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றன. அதேபோல ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

ஆசிய கோப்பை: க்ரூப் 4 சுற்றில் இப்போது இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியில் டாப் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா இதில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஏற்கவே க்ரூப் சுற்றில் இரு அணிகளும் மோதிய போது, இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இருப்பினும், அதன் பிறகு மழை கொட்டி தீர்க்கவே பாகிஸ்தான் ஒரு பால் கூட பேட்டிங் செய்யாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்த சூப்பர் 4 போட்டியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா- பாகிஸ்தான் போட்டி: தொடர்ந்து களமிறங்கிய ரோஹித்- கில் இணை இந்தியாவுக்கு வலுவான ஒரு தொடக்கத்தைத் தந்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தையும் விளாசினர். முதலில் ரோஹித் சர்மா 17ஆவது ஓவரில் 56 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த ஓவரிலேயே கில்லும் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கோலி- ராகுல் நிதனமான ஆட்டத்தை ஆரம்பித்தனர். இருப்பினும், அப்போது மழை அதிகமாகப் பெய்ய தொடங்கியது.

மழை தொடர்ந்து கொண்டே இருந்ததால் போட்டி ரிசர்வ் நாளான இன்று ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோலி 16 பந்துகளில் 8 ரன்களுடனும், ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்று 24.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்தியா தனது பேட்டிங்கை தொடர உள்ளது. முழுமையாக 50 ஓவர் போட்டியாக இது நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்: இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகமே நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "இன்றும் மழை பெய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி கேப் விட்டு.. கேப் விட்டு விளையாடினால் போட்டி எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்..

மழைக்கு வாய்ப்பு இருப்பதால் பகலிரவு இரவு போட்டியைக் காட்டிலும் பகல் நேரத்தில் நடக்கும் வகையில் போட்டிகளை நடத்துவ சரியானதாக இருக்கும். ஏனென்றால் மழை பெரும்பாலும் மாலை/இரவில் பெய்யும்" எனப் பதிவிட்டிருந்தார்.

போட்டி நடக்குமா: அதேபோல மற்றொரு ட்வீட்டில், "இன்றைய போட்டியாவது சீக்கிரம் தொடங்க வேண்டும். இல்லையென்றால் நேற்று நடந்தது போலவே இன்றும் நடக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்" என்று ட்வீட் செய்துள்ளார். இன்றைய போட்டியும் மழையால் ரத்தானால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். இதன் மூலம் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் முதல் இடத்திற்குச் செல்லும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+