சென்னைக்கு இன்று மழை இருக்கா? விலகிய ‛மிக்ஜாம்’ புயலால் இயல்பு வாழ்க்கை திரும்புமா? நிலவரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛மிக்ஜாம்' புயல் சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று மழை பெய்யுமா? விலகிய ‛மிக்ஜாம்' புயலால் இயல்பு வாழ்க்கை திரும்புமா? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக மாறியது. . இந்த புயல் இன்றுதெற்கு ஆந்திரா கடற்கரையில் நெல்லூருக்கும்-மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.

Will its rain in Chennai today after Cylcone Michaung moves towards to Andhra? details here

இந்த புயல் நேற்று சென்னை அருகே நிலை கொண்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது.குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 162 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சென்னை அருகே நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று காலை 4.30 மணியளவில் மிக்ஜாம் புயல் என்பது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு வடகிழக்கு திசையில் 30 கிலோமீட்டர் தெலைவில், பாபட்லாவில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையின் வடக்கு பகுதியில் இருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் இருந்து 190 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இன்று முற்பகல் இந்த புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது.

இந்நிலையில் விலகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையை விட்டு மழை ஓய்ந்துள்ளது. இன்று காலையில் பல இடங்களில் மழை என்பது பெய்யவில்லை. அதோடு காற்றின் வேகம் என்பது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இது மக்களுக்கு ஆறுதலாக விஷயமாக உள்ளது. இருப்பினும் கூட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதா? என்றால் அது இல்லை.

மழை நீர் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை வெளுத்து வாங்கிய மழையால் சென்னை முழுவதுமே வெள்ளம் தேங்கியது தான் இதற்கு காரணம். அனைத்து சாலைகளிலும் நீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் சென்னையின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து என்பது முடங்கி உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள், அரசு பஸ்கள் இயங்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் தான் சென்னையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மழை நீரை வெளியேற்றும் பணி என்பது வேகமாக நடந்து வருகிறது. அதோடு மழை இல்லாத நிலையில் இந்த வெள்ளநீர் விரைந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஒருநாள் பிடிக்கும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+