சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை.. வானிலை வார்னிங்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இதனால் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காலை 8.30 மணி வரை தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை மைய விரிவான அறிவிப்பு: இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பாதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பாகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15ஆம் தேதி போக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்க வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஓட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.2.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக
15.11.2023; கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.1.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.11.2023 மற்றும் 1811.2003 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2023 மற்றும் 20.1.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.1.2023: 14.11.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம். மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள். பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் கன முதல் மிக கனமழையும், காலப்புரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பெரம்பலூர். அரியலூர். திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் பறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஊசில பாகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 9.30 செல்சியஸ் மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை
15.11.2023 மத்தியமேற்கு-வடமேற்கு வங்கக்கடல் பாகுதிகளில், வடஆந்திர-ஒரிசா கடலோர பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.11.2023: மத்தியமேற்கு மற்றும் அதை சுட்டிய வடமேற்க வங்கக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடஆந்திர ஒரிசா கடலோர பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .
17.11.2023: வடமேற்கு மற்றும் அதை வட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .
வட ஆந்திர, ஒரிசா , மேற்குவங்க. வங்கதேச கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று| பணிக்கு 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 15 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வடமேற்கு மற்றும் அதை எட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஒரிசா , மேற்கு வாங்க , வங்கதேச கடலோர பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications