இன்று ‛மஞ்சள் அலர்ட்’.. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம்
சென்னை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவுக்கு ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் 2வது வாரத்தில் தான் தமிழ்நாட்டில் தொடங்கும். ஆனால் இப்போது தென்மேற்கு பருவமழை மே இறுதியிலேயே தொடங்கிவிட்டது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தில் வெயில் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இன்று 7 வது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே தான் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கு இன்று ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்தில் ஒரு இடத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருந்நதால் மட்டுமே‛மஞ்சள் வார்னிங்' என்பது விடுக்கப்படும். இதனால் இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்யலாம்.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பாரி முனையில் 4 செமீ மழை பெய்துள்ளது. சென்ட்ரல், கொளத்தூர், கொரட்டூர்,நெற்குன்றம், அடையாறு, மடிப்பாக்கத்தில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
அதேபோல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இன்று மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்களும், கேரளாவில் இன்று முதல் 2 நாட்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்த கனமழையால் நேற்று மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் மாயமாகி உள்ளனர். அதேபோல் கர்நாடகாவை எடுத்து கொண்டால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் மஞ்சள் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications