ஊட்டி, கொடைக்கானல் மாதிரி குளுகுளுன்னு இருக்கனும்.. ஏசி போட்டால் கரெண்ட் பில் கம்மியா வரனுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் இருப்பது போல் வீட்டில் குளுகுளுவென இருக்க வேண்டும்..அதேநேரம் ஏசி பயன்படுத்தும் போது கரெண்ட் பில் கம்மியாக வர வேண்டும் என்றால், எத்தனை டன் ஏசி யூஸ் பண்ணலாம்.. எந்த வகையான ஏர் கண்டிஷனர் உங்கள் வீட்டிற்கு சிறந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் 100 டிகிரி என்கிற அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துவிட்டது. பல இடங்களில் வெயில் சதமடிக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயில் கடுமையாக இருக்க போகிறது.

You want cool climate like Ooty and Kodaikanal but current bill should come down while AC using

பகலில் வெயில் அதிகமாக இருக்கும், இரவில் புழுக்கம் அதிகமாக இருக்கும்.. இதனால் சென்னை போன்ற காங்ரீட் காடுகளில் ஏசி இல்லாமல் வாழவே முடியாத நிலை இருக்கிறது. மற்ற ஊர்களில் ஏசி ஆடம்பர மற்றும் அத்தியாவசியமற்ற ஒன்றாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏசி கண்டிப்பாக அவசியமான ஒன்றாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் பலரும் இஎம்ஐஇல் கூட ஏசி வாங்கிவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள்.. ஒருவேளை உங்களுக்கும் ஏசி என்ற ஏர் கண்டிஷனர் வாங்கும் ஆசை இருந்தால், அதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து கொள்வது உங்கள் பர்சுக்கு மிகவும் நல்லது. இதை அறிந்து கொண்ட பின் ஏசி வாங்கினால் உங்கள் பணத்தை கணிசமாக சேமிக்க முடியும். மேலும் மின் கட்டணத்தையும் கணிசமாக சேமிக்க முடியும்.

ஏசியை பொறுத்தவரை மின் சேமிப்பு, ரேட்டிங் மற்றும் டன் அளவு ஆகியவற்றை பொறுத்து விலை மாறுபடும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஏசிக்களை எப்படி வாங்குவது என்பதை பார்ப்போம்.

முதலில் எத்தனை டன் (Tonnage) ஏசி உங்களுக்கு வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் படுக்கை அறையின் அளவைப் பொறுத்து எத்தனை டன் ஏசி வாங்கலாம் என்பதை பாருங்கள். உங்கள் படுக்கை அறை 100 - 120 சதுர அடி அளவு இருக்கும் என்றால் 1 டன் ஏசி போதும். 120 - 180 சதுர அடி அளவுள்ள படுக்கை அறை என்றால் 1.5 டன் ஏசி தேவைப்பபடும். 180 - 240 சதுர அடி அறை என்றால் 2 டன் ஏசி வேண்டும்.

நடுத்தர வர்க்கத்தினர் வாழும் வீடுகளில் படுக்கை அறை பெரும்பாலும் 100 - 240 சதுர அடி அளவு தான் தான் இருக்கும் என்பதால் ஒன்று முதல் ஒன்றரை டன் ஏசி இருந்தால் போதும்.

ஒரு டன் அல்லது ஒன்றரை டன் என எந்த ஏசி வாங்குவதாக இருந்தாலும் ஸ்டார் ரேட்டிங் பாருங்கள். ஏசிக்கு 5 ஸ்டார் இருந்தால், அது குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும். பணம் உங்களிடம் அதிகம் இருக்கிறது அல்லது அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ளீர்கள் என்றால் தாராளமாக 5 ஸ்டார் ஏசி வாங்கலாம். இல்லைப்பா என் கிட்ட நிறைய பணம் இல்லை.. குறைவாகவே உள்ளது.. ஏசியும் குறைவாகவே பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்கிறீர்களா.. அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே ஏ.சி பயன்பாடு இருந்தால் 3 ஸ்டார் ஏசியே உங்களுக்கு போதும்.

அடுத்ததாக ஏசி வாங்குவோர் முக்கியமாக பார்க்க வேண்டியது, ஏசியை இயக்கும் கம்ப்ரெஸ்ஸர் - ஏசியின் இதய துடிப்பே கம்ப்ரெஸ்சர் தான். அதற்கு அதிக வருட வாரண்டியை எந்த ஏசி நிறுவனம் தருகிறதோ, அந்த ஏசியை வாங்குவதே நல்லது.

அதேபோல் விலை குறைவாக கிடைக்கிறது..ஐந்து ஸ்டார் போட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு ஏசியை வாங்க வேண்டாம். நல்ல பிராண்டுகளை தேர்வு செய்யுங்கள். அந்த ஏசி தான் நீண்ட நாள் உழைக்கும் . அதிக மின்சாரத்தை சேமிக்கும். விலை குறைவாக இருக்கிறது என்று வாங்கினால், பின்னாளில் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியநிலை வரும். ஏசியை பொறுத்தவரை, வருடத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதால் நல்ல பிராண்டில் வாங்கினால் வருடா வருடம் சர்வீஸுக்கு பிரச்சனை இருக்காது. இந்த காரணிகளை பொறுத்து ஏசி வாங்குங்கள்.

ஏசியை பொறுத்தவரை இண்வெர்டர் ஏசி வாங்கினால் மின்சாரம் சேமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இண்வெர்டர் ஏசியை பொறுத்தவரை கவனமாக பராமரிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நார்மல் ஏசியைவிட அதிகமாக பராமரிப்புக்கு செலவு செய்ய வேண்டியது வரும்.

அடு்த்ததாக உங்கள் வீடு பழைய வீடு என்றால், வீட்டில் டொமஸ்டிக் மின்சார லைனில் ஏசிக்கு ப்ரீலோடு இருக்க வாய்ப்பு இலலை. எனவே இபி ஆபிஸ்க்கு சென்று ப்ரீலோடு நீட்டிப்புக்கு விண்ணப்பியுங்கள். அதற்கான கொடேஷன் வெளிவரும்போது, ​​நிர்ணயிக்கப்பட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். புதிய வீட்டிற்கு பிரச்சனை இல்லை..

ஏர் கண்டிஷனரை வீட்டில் மாட்டும் போது எர்திங் (earthing) சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இடைவெளிகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. அறை காற்று புகாத அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் கரெண்ட் பில் அதிகமாக இருக்கும்.

இறுதியாக உங்கள் அறையில் ஏசி மாட்டிய பிறகு 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்தினாலே, அறையில் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும். அறையை வேகமாக குளிர வைக்க சிறிது நேரம் மின் விசிறையை பயன்படுத்தலாம்.. நீங்கள் ஒன்றரை டன் ஏசி வாங்கினால் விரைவில் அறை குளிர்ச்சியடையும். குறைந்த நேரம் பயன்படுத்திவிட்டு ஆப் செய்துவிடலாம். மின்சாரமும் குறைவாகவே பயன்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+