உதறும் ஊட்டி.. அலறும் அவலாஞ்சி.. வெடவெடப்பை தரும் வெள்ளை பனி! என்ன காரணம்?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று காலை பதிவானது.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் நவம்பர் முதல் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் உறைபனி ஏற்படவில்லை.

நீர் பனி விழுவதும் தாமதமானது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் காலை முதலே ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், புற்கள், சாலைகள் மீது உறைபனி அதிகளவில் இருக்கிறது. அதிலும் தலைகுந்தா பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது போல் உதகை நகரில் 5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உள்ளது. மேலும் காந்தல், பிங்கர் போஸ்ட் பகுதிகளிலும் அதிக அளவு உறைபனி உள்ளது.
இந்த நிலையில் கடுங்குளிரால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். சுமார் 50 நாட்களுக்கு பிறகு உறைபனி தொடங்கியது. காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரால் மக்கள் நடுங்குகிறார்கள். சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் இந்த உறைபனி அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது.
ஊட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி குறைபட்ச வெப்பநிலை 11 டிகிரியாக இருந்தது. சாலைகள், வாகனங்களின் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி நிலவி வருகிறது. காலம் தாமதமாக உறைபனி தோன்றியதற்கு காரணம் தெரியவில்லை. கடந்த சில தினங்களாக நீலகிரியில் உறைபனி ஏற்பட்டு வெப்பநிலை மைனஸில் சென்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி நீர்பிடிப்பு பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று காலை பதிவானது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக உறைபனி, நீர்ப்பனியின் தாக்க் அதிகரித்து காணப்படுகிறது.
உதகை, குன்னூர் , கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சில இடங்களில் உறைபனியும் சில இடங்களில் நீர்ப்பனியின் தாக்கமும் அதிகமாகியுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காலை நேரத்தில் சில இடங்களில் உறைபனியும் சில இடங்களில் நீர்ப்பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. தொடர் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications