மத்தியில் பாஜக... மாநிலத்தில் அதிமுக - புதிய கட்சியின் வினோத ஆதரவு
சென்னை:
அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற புதிய கட்சி மத்தியில் பாஜகவையும் மாநிலத்தில் அதிமுகவையும் ஆதரிப்பதாகஅறிவித்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற புதிய கட்சி நேற்று (சனிக்கிழமை) சென்னையில் தொடங்கப்பட்டது. கட்சியின்கொடி பச்சை வண்ணத்தில் வெள்ளை வட்டம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்துஅக்கட்சியின் நிறுவனர் ரபீக் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. முஸ்லிம்மக்களுக்கு எந்த தீங்கும் நடக்கவில்லை. ராமர் கோவில் கட்டுவதை மறு பரிசீலனை செய்யுமாறு வாஜ்பாய் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பாதுகாப்பாக உணருகிறோம்.
தமிழகத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசு சமீபத்தில் அறிவித்த விலைவாசி உயர்வுதவிர்க்க முடியாது. மாநிலத்தை திறம்பட நடத்திச் செல்ல இது அவசியம்.
எனவே மத்தியில் பாஜகவையும், மாநிலத்தில் அதிமுகவையும் ஆதரிக்கிறோம். வரும் இடைத் தேர்தலில்அதிமுகவுக்கு ஆதரவாக எங்கள் கட்சி செயல்படும். முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்லாமல் சமுதாய நலனை மனதில்வைத்தும் செயல்படுவோம்.
விரும்பி மதம் மாறியிருந்தால் தவிர, பணம் கொடுத்து மிரட்டி மதம் மாற்றக் கூடாது. அனைத்து மதமாற்றங்களும்சட்ட விரோதமானது தான். 2006ம் ஆண்டு வரை எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என்று அவர்கூறினார்.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications