ஓரினச் சேர்க்கையாளர்களும் ஊனமுற்றவர்களே.. சாமியின் புது உளறல்
டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மரபணு ரீதியாக ஊனமுற்றவர்கள் எனத் தெரிவித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி.
டிவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியின் ஸ்டைல். ஆனால், சமீபகாலமாக டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளைக் குறைத்திருந்தார் சுப்பிரமணியன் சாமி. காரணம், ‘ராமர் கோயில் மற்றும் சட்ட கோணங்கள்' எழுதுவதால் தன்னால் முன்பைப் போல் அதிகம் டிவிட் செய்ய இயலவில்லை என அவரே விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவர்.
கடந்த வாரம் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தடை இல்லை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வரவேற்றார்.
அமெரிக்க நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் 377வது பிரிவை திருத்தி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி நடத்தினர்.
@GentleGawker : Issue is not respect. We respect handicapped persons. Homos are genetically handicapped
— Subramanian Swamy (@Swamy39) June 30, 2015 இந்த நிலையில், சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘நாம் உடல் ஊனமுற்றவர்களை மதிக்கிறோம். ஓரினச் சேர்க்கையாளர்களும் மரபணு ரீதியாக உடல் ஊனமுற்றவர்கள் தான்' எனத் தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சாமியின் இந்தப் பதிவு பெரும் விவாவதத்திற்கு ஆளாகியுள்ளது. டிவிட்டரில் அவரைப் பாலோ செய்யும் சிலரே, சுப்பிரமணியன் சாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications