கோவாவின் முதல் பெண் முதல்வர் சசிகலா ககோத்கர் காலமானார்
கோவா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் சசிகலா ககோத்கர் உடல் நலக்குறைவால் காலமானார்.
பனாஜி: கோவா மாநில முன்னாள் முதல்வர் சசிகலா ககோத்கர் உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.
கோவாவின் முதல் முதலமைச்சர் தயானந்த பண்டோத்கரின் மகள் சசிகலா ககோத்கர். தயானந்த பண்டோத்கர் 1973-ம் ஆண்டு மரணம் அடைந்தபிறகு சசிகலா ககோத்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1979 ஏப்ரல் மாதம் வரையில் முதல்வர் பதவியில் நீடித்தார். கோவா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற அவர் 90-களில் கல்வியமைச்சராகவும் இருந்தார்.

ஆரம்பக் கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் பயன்படுத்துவதை தவிர்த்து மராத்தி மொழியை பிராந்திய மொழியாக கொண்டுவர காரணமாக இருந்தார். தற்போது ஆங்கில வழி பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து போராடி வரும் பாரதிய பாஷா சுரக்ஷா மஞ்ச் அமைப்பின் தலைவராக இருந்தார்.
கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் சசிகலா ககோத்கர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications