சல்மான்கானுக்கு ஈஸியாக ஜாமீன் கிடைக்க என்ன காரணம் தெரியுமா?: சாத்வி சர்ச்சை கருத்து
டெல்லி: முஸ்லீம் என்பதாலேயே நடிகர் சல்மான் கானுக்கு, கார் விபத்து வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி வெளியிட்ட கருத்தால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் சாத்வி பிராச்சி.

இவர், சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பற்றி இன்று கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சல்மான் கான் முஸ்லீமாக இல்லாமல் இருந்தால், இந்த வழக்கில் ஏழைகளுக்கு நீதி கிடைத்திருக்கும். முஸ்லீம் என்பதாலேயே காங்கிரஸ் கட்சியும் சல்மான் கானுக்கு ஆதரவு அளிக்கிறது.
இந்த நாட்டில், ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு மற்றொருவகை நீதியும் செயலாக்கப்படுவது மீண்டும் நிரூபணமாகிவிட்டது. ஏழையை கொலை செய்த ஒருவருக்கு இரு நாட்கள் கூட சிறை தண்டனை இல்லை என்பதுதான் நாட்டின் நிலைமையாக உள்ளது. இவவ்வாறு பிராச்சி தெரிவித்தார்.
குடிபோதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை மும்பை ஹைகோர்ட்டு நேற்று நிறுத்தி வைத்தது குறித்து இவ்வாறு பிராச்சி கருத்து கூறினார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
நல்ல ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார்.. இவர் தன் கட்சிக்கு சமாதி கட்டுகிறார்... ஜவாஹிருல்லா -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications