சன்னியை எப்படியாவது பார்த்து விட வேண்டும்... பேனரை கிழித்து பார்த்த முரட்டு ரசிகர்!
நடிகை சன்னிலியோனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று பேனரை கிழித்துக் கொண்டு பார்த்த முரட்டு ரசிகரின் புகைப்படம் சமக வலைதளங்களில் ரகளை கிளப்புகிறது.
Recommended Video

கொச்சி : நடிகை சன்னி லியோன் கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்த போது மேடையில் இருந்த பேனரை கிழித்துக் கொண்டு வந்து தலையை விட்டு பார்த்த முரட்டு பக்தரின் படங்கள் சமூக வலைதளங்களில் ரகளை கிளப்பி வருகிறது.
பாலிவுட் நடிகை சன்னிலியோன் கேரள மாநிலம் கொச்சி எம்.ஜி. சாலையில் ஒரு செல்போன் நிறுவன ஷோரூமை திறந்து வைப்பதற்காக சவருகை தந்து இருந்தார். கேரள ரசிகர்கள் சன்னிலியோனை பார்க்க திரண்டதால் கொச்சியில் 2 மணி நேரத்திற்கு மேல் வாகன போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது.
கேரளாவில் நடிகர், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. தமிழ், தெலுங்கு பட உலகில் இருப்பதுபோல ரசிகர் மன்றங்கள், கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பதெல்லாம் அங்கு கிடையாது. இந்த நிலையில் சன்னிலியோனை பார்க்க திரண்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து நெரிசல்
சன்னிலியோன் வருகையால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது தொடர்பாக அந்த செல்போன் நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு விஷயம் சீரியஸாகிவிட்டது.

குஷியான சன்னி
அலைகடலென திரண்ட தொண்டர்கள் மத்தியில் சன்னியின் கார் நீந்திச் சென்றது. ரசிகர்கள் பாசத்தில் நனைந்த சன்னி படு குஷியாக டுவீட்டியுள்ளார்.
|
முரட்டு ரசிகர்
சன்னிலியோனை பார்க்கத் திரண்ட ரசிகர்களின் கூட்டம் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடுமையின் உச்சகட்டமாக சன்னிலியோனை பார்த்துவிட வேண்டும் என்று அவர் நின்றிருந்த மேடைக்கு பின்புறம் போடப்பட்டிருந்த பேனரை கிழித்துக் கொண்டு தலையை விட்டு சன்னிலியோனை பார்த்து ரசித்து பிறவிப் பலனை அடைந்துள்ளார் ஒரு முரட்டு ரசிகர்.

வாழ்க ரசிகர்கள்
வாழ்க இளைஞர்களின் நடிகை மோகம் என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரசிகர்களை பார்க்கத் திரள்வதில் தமிழகத்தினரை மிஞ்சிவிட்டனர் கேரள இளைஞர்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications