காந்தியைக் கொன்றது போல கெஜ்ரிவாலையும் சுட்டுக் கொல்வோம்... 373 ஓட்டு வாங்கிய சாமியாரின் பேச்சு!
டெல்லி: நாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம். அதேபோல கெஜ்ரிவாலையும் சுட்டுத் தள்ளுவோம் என்று பேசி வந்த ஒரு சாமியார் வேட்பாளர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியுள்ளார். இவருக்கு வெறும் 373 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன.
அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுவாமி ஓம்ஜி. இவர் யார் என்றே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது இவரது பேச்சு எல்லாமே வெறித்தனமாகவே இருந்தது.

பாஜக தொப்பியைப் போட்டபடிதான் இவர் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலை இவர் தேச விரோதி என்றும் பேசினார்.
பிரசாரத்தின்போது இந்த ஓம்ஜி பேசுகையில், பாஜகதான் எனது கட்சி. அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் பறிக்க முயல்கின்றன. அதைத் தடுக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன்.
ஓஜஸ்வி கட்சியின் உலகளாவிய தலைவர்தான் நான். இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆசாராம் பாபு மற்றும் நாராயண் சாய் ஆகியோர் ஆவர். இருவரும் சிறையில் இருப்பதால் அக்கட்சியையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.
எனக்காக டெல்லியில் 10 லட்சம் தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கெஜ்ரிவால், காங்கிரஸுக்கு வர வேண்டிய ஓட்டுக்களைத் தடுக்கவே நான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். பாஜக வேட்பாளர் நூபுர் சர்மா வெல்ல வேண்டும் (ஆனால் தோற்றுப் போய் விட்டார்).
கெஜ்ரிவாலுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அவர் தோற்றுப் போய் விடுவார். தேசதுரோகி கெஜ்ரிவால் குறித்து நான் எழுதிய புத்தகம் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை கெஜ்ரிவால் வீட்டுக்குப் போய் நானே கொடுத்து அவரது கன்னத்திலும் அறை விட்டேன்.
நான் பரசுராமரின் அவதார். நான் மணி அடிக்கும் சாமியார் அல்ல, துரோகிகளை சுட்டுத் தள்ளுபவன். நாங்கள்தான் காந்தியை சுட்டோம். கெஜ்ரிவாலையும் நாங்கள் சுட்டுக் கொல்வோம் என்றார் ஓம்ஜி.
ஓகேஜி!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications