நம்பினால் நம்புங்கள்... ஆப்கனிஸ்தானில் "உயிர்த்தெழுந்த" புரூஸ்லீ!
காபூல்: பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்புக் கலை நிபுணருமான மறைந்த புரூஸ்லீயின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கிறார் இந்த ஆப்கன் இளைஞர். இதனாலேயே இவரை ஆப்கன் புரூஸ்லீ என மக்கள் அழைக்கிறார்கள்.
ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் பிரபல நடிகர் புரூஸ்லீ. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட புரூஸ்லீ, கடந்த 1973ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.
தலைவலிக்காக மாத்திரை சாப்பிட்ட அவர் பிறகு எழவேயில்லை. அவரது மரணம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே அவர் நடித்திருந்தாலும், அவரது புகழ் இன்னும் சண்டைப் பிரியர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது.
இந்நிலையில், இவரைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் ஆப்கானிஸ்தானில் ஒரு இளைஞர் உள்ளார்.

ஏழைக் குடும்பம்...
ஆப்கானிஸ்தானில் வாழும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த அப்பாஸ் அலிஷாடா (20). 10 சகோதர சகோதரிகளூடன் பிறந்த இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஆப்கான் புரூஸ்லீ...
அதில், அப்படியே புரூஸ்லீயின் தோற்றத்துடன் காணப்படுகிறார் அப்பாஸ். எனவே இவருக்கு ஆப்கான் புரூஸ்லீ என இணைய தள ரசிகர்கள் பெயரிட்டுள்ளனர்.

சாகசங்கள்...
உருவ ஒற்றுமை மட்டுமல்லாது, புரூஸ்லீயைப் போலவே தனது சண்டையிடும் திறமையையும் வளர்த்துக் கொண்டுள்ளார் அப்பாஸ். இந்த வீடியோவில் அவர் புரூஸ்லீ செய்யும் சாகசங்களைச் செய்து காட்டி ஆச்சர்யப்பட வைக்கிறார்.

புரூஸ் ஹசாரா...
பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தனது வீடியோவுக்கு புரூஸ் ஹசாரா என அப்பாஸ் பெயரிட்டு உள்ளார்.

பயிற்சி...
அப்பாஸ் காபூலில் தனித்துவிடப்பட்ட தாருலமான் அரண்மனையில் தினமும் இரண்டு வேளை பயிற்சியில் ஈடுபடுகிறாராம்.

சீன தற்காப்புக் கலை...
அப்பாசின் பெற்றோர்களுக்கு சீன தற்காப்பு கலையை பயிற்சி அளிக்கும் வசதி இல்லாததால், அந்தப் பொறுப்பை அவரது பயிற்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications