ஆப்கனில் பயங்கர விபத்து.. பெட்ரோல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதியதில் 72 பேர் பலி
காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று டேங்கர் லாரி மீது 2 பேருந்துகள் மோதி வெடித்து சிதறிய விபத்தில், 73 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான கான்ஸியில் உள்ள கந்தஹார்-காபூல் இணைப்பு நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பேருந்து எதிர் திசையில் வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லாரியும், பேருந்தும் தீபிடித்து எரிந்தது. அப்போது பின்னால் வந்த பேருந்தின் மீதும் தீ பற்றிக் கொண்டது. இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 73 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 52-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கான்ஸி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக காபூல் மற்றும் காந்தகார் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications