ஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்
சென்னை : சமூக சீர்கேடுகளைப் பற்றிய பாடல் வரிகளுடன் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பாடிய ராப் இசை அமெரிக்கா வரை பரவி பல லட்சம் ரசிகர்களைத் தேடித் தந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகி நிக்கி மினாஜ். இவருக்கு டுவிட்டரில் 2 கோடி ரசிகர்கள் உள்ளனர். இவரது அனகோண்டா என்ற வீடியோ ஆல்பத்தின் இசையை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த ராப் இசை பாடகியான சோபியா அஷ்ரப் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதனை பார்த்த கிராமி விருது வென்றவரான நிக்கி மினாஜ் கடந்த சனிக்கிழமை கட்டுரை ஒன்றுடன் சோபியாவின் வீடியோவை இணைத்து மீண்டும் டுவிட் செய்துள்ளார். அதில் மினாஜ் தனது பாராட்டுதலை சோபியாவுக்கு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் வெளியான 3 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.
அதன்பின் ரெடிட் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பல்லாயிரம் பேரை பலிகொண்ட போபால் வாயு கசிவு சம்பவத்தை கொண்டு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தாக்கி ராப் பாடல் ஒன்றை சோபியா அஷ்ரப் பாடியுள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடலில் சோபியா புதிய வரிகளை கொண்டு எழுதியுள்ளார்.
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றை சாடும் வகையில் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தனது பணியாளர்கள் மற்றும் மண், நீரை முறையாக சுத்தம் செய்யாத அந்த நிறுவனத்தை சாடியுள்ளதுடன் தனது பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் தவறியுள்ளதையும் எச்சரிக்கையுடன் சுட்டி காட்டியுள்ளார் சோபியா.
அந்த வீடியோவில், விஷத் தன்மை கொண்ட பாதரச ஆலை மூடப்பட்டு கடந்த 14 வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் கால்வாய் ஒன்று உள்ளது. தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் பின்தொடர அந்த கால்வாயை சுற்றி அந்த பகுதியில் அஷ்ரப் முன்னோக்கி செல்வது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜட்கா என்ற அரசு சாரா அமைப்பொன்றின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த பாடல் 3 நிமிடம் ஓடுகிறது.
சோபியா அஷ்ரப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைப்பில் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications