எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி?
சென்னை: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்னும் சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்கு கோருவார். 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

ஆனால் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் திமுகவுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்படும் நிலை உருவாகும்.
1991-ம் ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications