துணை முதல்வர்- வைகோ, கல்வி- திருமா, நிதி- ஜி.ஆர், உள்ளாட்சி- முத்தரசன்: சுதிஷ் அறிவிப்பு!
கோவில்பட்டி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார கூட்டம் கோவில்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சுதிஷ், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வென்றால் அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாக்கக்கள் ஒதுக்கப்படும் என்று சுதிஷ் அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலைமைச்சாராக செயல்படுவார். துணை முதல்வராக வைகோ இருப்பார். நிதித்துறை ஜி.ராமகிருஷ்ணன், கல்வித் துறை திருமாவளவன், முத்தரசனுக்கு உள்ளாட்சி துறை ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சுதிஷ் அறிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மின்னல் முகமது அலி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மக்கள் நலக்கூட்டணி வென்றால் ஆட்சியில் அமைச்சரவையில் யார் யார் ? கோவில்பட்டி கூட்டத்தில் இலாக்காக்களை சுதீஷ் அறிவித்தார்.
முதல்வர் -விஜயகாந்த்
துணை.முதல்வர் ; வைகோ
நிதி; ஜி.ராமகிருஷ்ணன்
கல்வி; திருமாவளவன்
உள்ளாட்சி; முத்துராசன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications