ரஜினியை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார்- திருமாவளவன்
ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.

மனிதர் ஆளவேண்டும்
ரஜினிகாந்த் தமிழரல்லாதவர், மராட்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு மனிதர் ஆளவேண்டும்.

பிரதமராகி விடுவார்
ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார். ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

செயலிழந்த அரசு
தமிழக அரசு செயலிழந்து கிடப்பதாக தெரிவித்த திருமாவளவன் அதிமுக இரு தரப்பினரும் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை, மாறாக அனைத்தும் கார்ப்ரேட் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக காலூன்றாது
மோடி அரசு மாட்டு வணிகத்தை கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாட்டுக்கறிக்கான தடை இந்தியா முழுமையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications