நந்தினி கொலைக்கு நீதி வேண்டும் - கமல் #Justice4Nandhini
நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: சிறுமி நந்தினி கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கமல் பதிவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி, 17. டிசம்பர் 29ம் தேதி காணாமல் போன சிறுமி கடந்த ஜனவரி 14ஆம் தேதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கீழமாளிகையைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் , அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கிய மணிகண்டன், நண்பர்களுடன் கூட்டாக பலாத்காரம் செய்து அவளது வயிற்றில் இருந்த கருவை எடுத்து எரித்துள்ளான். நந்தினியை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது.

இந்து முன்னணி தலைவர்
இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத்தினர் அரியலூரில் ஜனவரி 28ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு காலதாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

நந்தினிக்கு நீதி வேண்டும்
காவல்துறையினரின் அலட்சியம் காரணமாகவே சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேக் உடன் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு வருகின்றனர்.
|
கமல் பதிவு
இதே ஹேஷ்டேகில் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன், "நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை.
|
மன்னிப்பு கேட்கிறேன்
குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல" என்று கூறியுள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications