திடீர் உடல் நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி
கல்கி பகவான் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர். இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை அம்மா பகவான் என்று மாற்றியதோடு தான் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வந்தார்.

இவருக்கு தமிழக, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் ஆசிரம்மங்களும் உள்ளது. உலகத்தை காப்பாற்ற வந்த கல்கி அவதாரம் என கூறிவந்தது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் கல்கி அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த அவரது பக்தர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகிறார்கள். இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவும் அங்கு சிகிச்சை பெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு குவிவதால் அவர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறைக்கும் கல்கி பகவான் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பக்தர்கள் கல்கி பகவானை பார்க்க அப்பல்லோவுக்கு வரவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications