நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல...அதிமுகவில் எங்கள் பங்கு அதிகம்- சொல்வது திவாகரன்

அதிமுகவில் தங்களுக்கு பங்கு அதிகம் என்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். அதிமுகவை கட்டி காப்பாற்றியதும் தாங்களே என பேசியிருக்கிறார் திவாகரன்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிமுகவின் சரித்திரத்தில் தங்களது குடும்பத்தின் பங்கு அதிகம்; அதிமுகவை எம்ஜிஆருக்கு பிறகு காப்பாற்றியதிலும் தங்களுக்கு அதிக பங்கு என பேசியிருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன்.

தஞ்சாவூரில் சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்தி வரும் பொங்கல் விழாவில் திவாகரன் பேசியதாவது:

அ.தி.மு.க. சரித்திரத்தில் தஞ்சைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புரட்சித்தலைவர் இந்த கட்சியை துவங்கும்போது இந்தபகுதியில் மிகப்பெரிய பங்காற்றியவர் அண்ணன் எஸ்.டி.எஸ். அதையும் யாரும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது.

அந்த நன்றியை யாரும் மறக்கக்கூடாது. எந்த நேரத்தில் யார் உதவி செய்திருந்தாலும் அதை மறக்கக் கூடாது. மறந்தால் அது உண்மையான தமிழனுக்கு அழகல்ல.

மன்னார்குடி தொண்டர்கள்தான்...

மன்னார்குடி தொண்டர்கள்தான்...

அப்போது திண்டுக்கல் தேர்தலை ஒரத்தாடு, மன்னார்குடி தொண்டர்களை வைத்துதான் நடத்தினார் எஸ்.டி.எஸ். ஆகையால், நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.

அதிமுகவை உடைக்க சதி

அதிமுகவை உடைக்க சதி

அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது. இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல. இப்போதும் எவ்வளவோ சதிகள் நடந்துகொண்டிருக்கிறது. எப்படியும் உடைத்துவிடலாம், ஏதாவது செய்து விடலாம் என பல சதிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி எது நடந்தாலும் எங்கள் சடலத்தின் மீதுதான் நடக்கும்.

அதிமுகவை காப்பாற்றிய நடராஜன்

அதிமுகவை காப்பாற்றிய நடராஜன்

2011ல் மிகப்பெரிய சதி நடந்தது. அம்மாவைவிட்டு எங்களையெல்லாம் நகர்த்தினால் போதுமென்று நினைத்தார்கள் அது நடக்கவில்லை. நடக்கவும் நடக்காது. எது செய்தாலும் திறந்த மனநிலையில்தான் செய்துவருகிறோம். புரட்சித்தலைவருக்கு பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காத்ததில் மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு, அதுவும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தினருக்கு உண்டு. அதில் மிகப்பெரிய பங்கு முனைவர் ம. நடராஜனுக்கு உண்டு. அதை எல்லோரும் மறந்திடலாம். நான் மறக்கமாட்டேன். ஏனென்றால், நானும் அவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். எங்கள் உயிர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியை கைப்பற்றினோம். அப்போது இரட்டை இலை முடக்கப்பட்டது. இரட்டை இலையை மீட்டெடுத்த பெருமை முனைவர் நடராஜனுக்கு உண்டு

அதிமுகவின் தளபதி நடராஜன்

அதிமுகவின் தளபதி நடராஜன்

இப்போது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இந்திய அளவில் முடங்கிய சின்னம் மீண்டும் வந்ததாக சரித்திரம் இல்லை. அப்போது முனைவர் நடராஜன் உழைத்து உழைப்பு எனக்கு தெரியும். ஜா அணி, ஜெ அணி ரெண்டையும் ஒன்றாக இணைத்து, இரட்டை இலை சின்னத்தை வாங்கினார். அதன்பிறகு நடைபெற்ற மதுரை, மருங்காபுரி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றி கண்டோம். அதற்கு தளபதியாக செயல்பட்டவர் முனைவர் நடராஜன். எந்தவிதமான எதிர்ப்புகளை பார்க்காமல் தலைவர் வளர்த்த கழகம், அம்மா ஆசைப்படி கழகத்தை நூற்றாண்டுகளுக்கு மேல் வழிநடத்த வேண்டும். நமக்கு கடுமையான காலகட்டம் இது,

அதிமுக தொடங்கியதில் இருந்து..

அதிமுக தொடங்கியதில் இருந்து..

அ.தி.மு.க.வுக்கும் பொதுச்செயலாளர், எங்களை போன்றவர்களுக்கு நிறைய மிரட்டல் இருக்கிறது. நாம்தான் எப்போதும்போல, அ.தி.மு.க. ஆரம்பித்திலிருந்தே காத்து வருகிறோம். அதே மாதிரி இப்போதும் காக்க வேண்டும், ஒன்றாக இருந்து ஒரு நல்ல தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

அநியாயம் நடக்கிறது

அநியாயம் நடக்கிறது

இந்தியாவை ஆள்வதற்கு ஒரு முகர்ஜியோ, குப்தாதான் வருகிறார்கள். 40 எம்.பி.யை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம்?. இரண்டாம் பட்ச குடிமக்களாகத்தான் இருக்கிறோம். புயல் அடித்து ஒருவாரம் கழித்துதான் மத்திய குழுவினர் வருகிறார்கள், காவிரி பிரச்னையில் பின்வாங்குகிறார் பிரதமர். புயல் நிவாரணம் வரவில்லை. பார்த்தீர்களா என்ன அநியாயம் நடந்துக்கிட்டு இருக்கிறது.

மத்திய அரசு மீது பாய்ச்சல்

மத்திய அரசு மீது பாய்ச்சல்

ஜல்லிக்கட்டை தடையை மீறி அனுமதித்தால் அரசாங்கத்தை கலைத்துவிடுவோம் என்று சொல்கிறார்கள். கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட் சொல்லியும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கலைக்க மறுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை அனுமதித்தால் கலைத்துவிடுவதாக சொல்லுகிறார்கள். எனவே நாம்தான் ஒன்றுமையுடன் இருந்து இவர்களை வேரறுக்க வேண்டும்

இவ்வாறு திவாகரன் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+