3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?
சென்னை: முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றுள்ள நேரத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று மாலை 3:00 மணிக்கு சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக-வின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூடுகிறது. கடந்த ஒரு மாத கால ஆட்சி மீதான விமர்சனங்களை எதிர்கொள்வது, கட்சி நிர்வாகிகளுக்கான அடுத்தகட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் ஜூன் 18-ல் வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க இந்த முக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதமே நிறைவடைந்துள்ள சூழலில், அரசியல் களம் தற்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்த சில நாட்களிலிருந்தே பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளன.

ஆட்சி அமைந்து 1 மாத காலம்
குறிப்பாக, தவெக அமைச்சரவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் முற்றிலும் புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளக் குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசமாவது வழங்கப்பட வேண்டும் என்ற அரசியல் முதிர்ச்சியான கருத்து நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஆனால் அதற்குள் இந்த ஆட்சி மூன்று மாதங்கள் கூடத் தாங்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கண்டனங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இன்னொருபக்கம் அதிமுகவினர் இந்த அரசு மீது குதிரை பேரம் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
3 மாதம் தாங்காது - திமுக விமர்சனம்
இத்தகைய தொடர் அரசியல் தாக்குதல்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் இப்போது டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், சென்னையில் இன்று ஒரு முக்கிய அரசியல் நகர்வு அரங்கேறுகிறது.
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3:00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆகியோருக்கு அதிரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் இல்லாத சூழலில் கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படுகின்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒரு மாத கால தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் வைக்கும் கடுமையான விமர்சனங்களை எவ்வாறு கையாள்வது, மக்கள் மத்தியில் அரசின் மீதான நற்பெயரைக் தக்கவைப்பது மற்றும் மக்கள் நலப்பணிகளை மாவட்ட வாரியாக எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அதுமட்டுமல்லாமல் மக்கள் தவெக மீது வைத்துள்ள அதீத நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கும் புதிய எம்.எல்.ஏ-க்களுக்கும் பொதுவான சில கடுமையான அறிவுறுத்தல்களும் வழிகாட்டுதல்களும் புஸ்ஸி ஆனந்த் தரப்பிலிருந்து வழங்கப்பட இருக்கின்றன.
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூடுகிறது
இவற்றுக்கெல்லாம் மேலாக, வரும் ஜூன் 18ம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் மிக முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தேர்தல் முடிவுகள் வெளியான போதும், அதற்குப் பின்னரும் பல அவசரக் கூட்டங்களை நடத்தித் திறம்படச் செயலாற்றிய புஸ்ஸி ஆனந்த், இப்போது நிலவும் அரசியல் சவால்களை முறியடிக்க இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூர்மையான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் எதிர்கொண்டு, அடுத்த ஒரு மாத காலத்திற்கான அரசியல் மற்றும் நிர்வாகப் பயணத்தை எப்படித் திட்டமிடுவது என்பதற்கான முக்கியத் திருப்புமுனையாக இந்த பனையூர் ஆலோசனைக் கூட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!
-
தூக்கப்படும் சீனியர்கள்? துண்டாகும் மாவட்டங்கள்? ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்கெட்ச்! 78 டூ 100 திமுக பிளான் -
"பாடினதுக்கு கைது பண்ணுறாங்கய்யா!" அமைச்சர் வன்னி அரசுவிடம் பாடகர் வேடன் வேதனை.. பின்னணி சம்பவம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications