IT Jobs: "பெங்களூர் டிசிஎஸ் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு".. ஜுன் 27ல் இண்டர்வியூ!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 27 ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து VMware Administrator பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்டோஸ் டெக்னாலஜியில் சர்வர் பிளாட்பார்ம், ஆக்டிவ் டைரக்டரி, ஐஐஎஸ், விண்டோஸ் கிளஸ்டரிங் மற்றும் விர்சுவலைசேஷன் தெரிந்திருக்க வேண்டும்.

IT Jobs

Powershell அனுபவம் வேண்டும். அதேபோல் விண்டோஸ் சர்வர் 2008 முதல் லேட்டஸ்ட் வெர்ஷன் வரையிலான சர்வர் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

Iaas, PaaS மாடல்ஸ் உடன் அசூர் கிளவுட் சர்வீஸஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். VMware ESXi5.x டூ லேட்டஸ் வெர்ஷன் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். P2V, V Motion, VMware Virtual center உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். HA, DRS மற்றும் ESXi கமெண்ட் லைன் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

விர்சுவல் மெஷின்ஸ் மற்றும் விர்சுவல் சர்வர்ஸ் ரெக்கவரி மற்றும் பேக்கப் அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சம் 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 27 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS, L Centre, Unit 6, No.78, 79 & 83, L-Center, PIP Industrial Area, Whitefield, Bengaluru, Karnataka 560 066 (வைதேகி மருத்துவமனை அருகே) என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+