தேனீ வளர்ப்பது குறித்து நூதன விளக்கம்
கோவை:
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அக்ரி இன்டெக்ஸ் - 2000 என்ற பெயரில் தேசிய வேளாண்மைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இக் கண்காட்சிக்கு வந்தவர்கள் ஒரு காட்சியைக் காணாமல் இருந்திருக்கமுடியாது. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் தலை முழுவதும்தேனீக்களை மொய்க்கவிட்டு தேனீ வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த புதுவிதமான செய்முறை விளக்கத்தை பல்கலைக் கழக வளாகம் முழுவதும் விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் செய்து காண்பித்துக் கொண்டிருந்தனர்.விஞ்ஞானிகளின் இந்த புதுமையான செய்முறை விளக்கம் கண்காட்சிக்கு வந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.
தேனீக்களை வளர்ப்பது எப்படி, தேன் சேகரிப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் எடுத்துக் கூறினர். ஒருராணித் தேனீயை தலையில் வைத்துக் கொண்டால்போதும் அடுத்த சில நிமிடங்களில் தலை முழுவதும் தேனீக்கள் மொய்க்க ஆரம்பித்துவிடும் என்றுவிஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தேனீக்கள் பற்றி விவசாயிகளிடம் ஒருவித பயம் நிலவுகிறது. ஆனால், உண்மையில் அவை மனிதர்களுக்கு நண்பன். நாம் அவற்றைத் தூண்டினால்தான் அவைநம்மைத் தாக்கும் என்று வேளாண்மைப் பல்கலைக் கழக பூச்சியியல் துறைப் பேராசிரியர் எம். முத்துராமன் தெரிவித்தார்.
நாட்டின் மொத்த தேன் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிகக் குறைவாக உள்ளது. ஆகவே, தமிழக விவசாயிகளிடையே தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பது குறித்துபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து 5 புதிய தேனீ வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. லிட்டில் பீ, ராக் பீ, இன்டியன் பீ,இத்தாலியன் பீ மற்றும் தம்மார் பீ ஆகிய புதிய தேனீக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து இப்போது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன்றார் முத்துராமன்.
யு.என்.ஐ.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications