கிராமம் சார்ந்த தொழில்களுக்கு புது சலுகைககள் - மத்திய அரசு முடிவு
டெல்லி: நாட்டின் வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த மேலும் அதிக நிதிச் சலுகைகளை அறிவிக்கவிருக்கிறது இந்திய அரசு.
இதன் ஒரு பகுதியாக நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வளங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கான உதவிகளை அறிவிக்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தற்காலிகமாக நிதித்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான பிரணாப்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
உலகப் பொருளாதார மந்தம் இந்தியப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தது. பிறநாடுகளே அசந்து போகிற அளவுக்கு இருந்தது அந்த வளர்ச்சி விகிதம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஆண்டு 7 சதவிகிதம் அளவுக்காவது நமது வளர்ச்சி இருக்குமா தெரியவில்லை.
இதைத் தவிர்க்க மேலும் புதிய நிதிச் சலுகைகளை அளிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் என்பது கிராமங்களைச் சார்ந்தே உள்ளது. இன்றும் 70 சதவிகிதம் கிராமப் பொருளாதாரமாகத்தான் உள்ளது. எனவே அந்த கிராமங்கள் சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்தப்போகிறோம்.
பன்னாட்டு நிதி அமைப்புகள், இந்தியாவின் கிராமங்களில் அதிக முதலீடு செய்வதை வரவேற்கிறோம். கிராமப்புற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அதிக சலுகைகளை அறிவிக்கும் திட்டமுள்ளது, என்றார் முகர்ஜி.
வரும் பிப்ரவரி 16-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் பிரணாப் முகர்ஜி. இந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பு, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அதிக ஊக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுகிறது. ஏற்கெனவே 3 கட்டமாக ரூ.4 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது இந்திய அரசு. இப்போது 4-வது கட்டமாக விவசாயத் துறைக்கும், கிராமங்கள் சார்ந்த தொழில்களுக்கும் புதிய சலுகைகள் அளிக்கப்படுகிறது.
எப்போதோ செய்திருக்க வேண்டியது... இப்போதுதான் அதுகுறித்து யோசிக்க துவங்கியிருக்கிறார்கள். தாமதமாக செயல்படுத்தினாலும், கிராமங்கள் வளம்பெறுவதே நாட்டுக்கு பாதுகாப்பானது!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications