விலையே இல்லை.. வெள்ளாமை செஞ்சு என்ன பயன்? வாழை சாகுபடியையே கைவிட்ட விவசாயிகள்!
கோவை: கோவை அருகே வாழை இலை, பழங்கள் ஆகியவற்றுக்கு உரிய விலை இல்லாததால் வாழைத்தாருடன் வாழத்தோப்புகளை தீ வைத்து அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் பகுதியில் 500 ஹெக்ட்டேர் பரபளவில் பூவன், நேந்திரன், கதளி உட்பட மூன்று ரக வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. வருட பயிரான வாழைக்கு தற்போது சரியான விலை இல்லை.

லாக்டவுன் காலம் என்பதால் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மனம் நொந்து போன விவசாயிகள் வாழைத் தோப்புகளை தீயிட்டு அழித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயி நடராஜன் கூறுகையில், இலை பயன்பாட்டுக்காக சுமார் 10,000 வாழை கன்றுகள் நட்டு வைத்தோம். நல்ல பலன் தரும் நேரத்தில் கொரோனா வந்தது.

தற்போது வாழை இலை பயன்பாடு முற்றிலும் தடைபட்டுவிட்டது. இலை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இலவசமாக கொஞ்சம் தந்தோம். இதனால் தற்போது எரிக்கிறோம்.

மனசு வலி தான் ஆயினும் மாற்று பயிர் செய்ய நிலத்தை உழ வேண்டும் என்பதால் தீ வைத்து அழிக்கிறோம். மேலும் எரிந்து கிடைக்கும் சாம்பல் மண்ணுக்கு உரமாகும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications