தாராளமயமாக்கலால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சர்வதேச வர்த்தகம் தாரளமயாக்கப்படும்போது விவசாயம் கடும் பாதிப்பிற்குள்ளாகும் என ஓய்வு பெற்ற உதவிவிவசாய இயக்குநர் கணேசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் விவசாயப் பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை மையத்தை திறந்து வைத்து ஓய்வு பெற்ற உதவிவிவசாயத் துறை இயக்குநர் கணேசன் பேசியதாவது:

நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. 60 சதவீதம் பேர் விவசாயத்தில்ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. அதோடு மத்தியஅரசு விவசாயிகளுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைத்து வருகிறது. உரத்திற்கு அழிக்கப்பட்டு வந்த மானியம்குறைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கோதுமை, சர்க்கரை, பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. பால்உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிள் மற்றும் பால்பவுடர் இறக்குமதி தேவையற்றது.

சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் தாராளமயமாக்கல் கொள்கை விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படும். இதனை மாற்றஅரசு கொள்கையளவில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தொடர்ந்து மானியம் அளிக்கவேண்டும் என்றார்.

மத்திய விவசாயத் துறை ஓய்வு பெற்ற உதவி இணை இயக்குநிர் அருணாசலம் பேசுகையில்,

மத்திய அரசு விளைபொருள் விலை நிர்ணயத்திற்காக கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் விவசாயப்பிரதிநிதிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனால் விவசாயப் பொருட்கள் விலை நிர்ணயம் செய்வதில்சரியான முறையை அரசு கடைபிடிக்கவில்லை.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 80 பயிர்களின் மூலம் உணவுஉற்பத்திக்கு ஆகும் செலவை கணக்கீடு செய்து அளித்தது. ஆனால் இதையும் இந்த கமிட்டி நிராகரித்து விட்டது.விவசாய விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.

விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால், உரிய முறையில் சாகுபடி நுணுக்கங்களும்அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+