தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்.. 4 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து
ஈரோடு காளிங்கராயன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் 4 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு: ஈரோட்டு மாவட்டம் காளிங்கராயன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் 4 மணி நேரமாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, காளிங்கராயன் கால்வாய் வழியாக விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தப் பகுதியில் மஞ்சள் விவசாயம் அதிகம். இதற்காக வழக்கமாக 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெறும் 28 நாட்கள் மட்டுமே கால்வாயில் இருந்து நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. காய்ந்த பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காததால் இன்று விவசாயிகள் ஈரோடு-கரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒத்தக்கடை சாலைபுதூர், வெங்கமேடு உள்ளிட்ட சாலைகளில் குறுக்கே விவசாயிகள் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் தொடர்ந்து ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் நடந்தும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பயிரை காப்பாற்ற உடனே 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும்.
கடந்த வாரம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கரட்டடிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தண்ணீர் இல்லாமல் மஞ்சள் பயிர்கள் கருகியதைக் கண்டு, அதிர்ச்சியில் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications