காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் நீர் திறப்பு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறந்துவிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.
Recommended Video

12 மாவட்டங்களின் காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதியன்று நீர் திறந்துவிடுவது வழக்கம். காவிரி நதிநீர் பிரச்சனை, மழை இல்லாத சூழ்நிலை போன்றவற்றால் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்க முடியாத சூழ்நிலைகளும் உருவாகும்.

கடைசியாக 2008-ம் ஆண்டுதான் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் 12-ல் இன்று மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீரை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர் 3 நாட்களில் திருச்சி கல்லணையை சென்றடையும்.
மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 101.72 அடியாக உள்ளது. தற்போது வினாடிக்கு 3,000 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதுபடிப்படியாக 10,000 கன அடி நீராக அதிகரிக்கப்படும்.

-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications