ஓமனிலிருந்து 55,000 டன் உரம் இறக்குமதி
திருச்சி: ஓமன் நாட்டில் இருந்து 55 ஆயிரம் டன் யூரியா தமிழகம் வந்துள்ளது. இவை தமிழகம் முழுக்க தனி சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக கட்சிகளும், விவசாய அமைப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்திற்கு தேவையான உரம் கையிருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஓமனில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு 30 ஆயிரம் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு 25 ஆயிரம் டன்னும் யூரியா வந்துள்ளது.
இவை தனி சரக்கு ரயில்களில் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து 1238 டன் ஓமன் யூரியா தனி சரக்கு ரயிலில் திருச்சி வந்தது. அவை சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று 2500 டன் யூரியா, தஞ்சை கும்பகோணத்திற்கு வருகிறது.












Click it and Unblock the Notifications