மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
மேட்டூர்: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும்.
இருப்பினும் கர்நாடகம் மனது வைத்தால் அல்லது இயற்கை வழி விட்டால்தான் இது முறைப்படி நடக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக இயற்கை கைவிட்டதாலும், கர்நாடகம் தண்ணீர் விட மறுத்ததாலும் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறப்பது என்பது நடக்காத காரியமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பதால் அணையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்ற முதல்வர் கருணாநிதி ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அணையைத் திறந்து விடுகிறார். நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
முதலில் விநாடிக்கு 6,000 கன அடி நீர் என்ற விகிதத்தில் தண்ணீர் திறக்கப்படும். பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் காவிரித் தண்ணீரால் பயன் பெறும்.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 103.24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2953 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணை கட்டப்பட்ட 75 ஆண்டுகளில் ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 15வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications