விவசாயிகளுக்கு தாராள கடனுதவி தேவை
கோவை:
இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு தாரளமாகக் கடனுதவி அளிக்க வேண்டும். இன்டர் நெட் மூலம் அவர்களுக்குத் தேவையானஆலோசனைகளை அளிக்க வேண்டும் என தாய்லாந்து நாட்டின் பேராசிரியர் ஆர்.பி சிங் தெரிவித்தார்.
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான பாத்திமா பீவி தலைமையில் 22 வதுபட்டமளிப்பு விழா நடந்தது. தாய்லாந்து நாட்டின் பாங்காங் உணவு வேளாண்மை நிறுவன உதவித் தலைமை இயக்குநர் பேராசிரியர் ஆர்.பி சிங், மலேசியா நாட்டுப்பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு ஆகியோருக்கு தமிழக வேளாண்மைப் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்தது.
பின்னர் ஆளுநர் பாத்திமா பீவி பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் 840 பேருக்குப் பட்டம் வழங்கினார். விழாவில் தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண்ணையன் பேசியதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக 6 கோடியே 35 லட்ச ரூபாயும், தேசிய வேளாண்மை ஆய்வுத் திட்டத்திற்காக ரூ.10 கோடியே 33 லட்சத்தையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 183 பயிர் வகைகள், 136 தோட்டக்கலை பயிர்கள், இரண்டு மரங்கள், ஆகியவற்றைபுதிதாக உருவாக்கியுள்ளது. இது தவிர 2001 ம் ஆண்டில், 14 புதிய பயிர் வகைகள் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
பட்டமளிப்பு விழாவில் கவுரப்பட்டத்தை ஏற்றுக் கொண்ட தாய்லாந்து பேராசிரியர் ஆர்.பி சிங் பேசியதாவது:
உலகமயமாக்கலால் ஏற்படும் போட்டியினைச் சமாளிக்கவும்,வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதியையும் நாம் திறமையாக சமாளிக்க வேண்டியநிலையில் உள்ளோம். உலக சந்தையில் வேளாண் விளை பொருட்களின் தரத்துடன் போட்டியிட வேண்டுமானால், தொழில்நுட்பம் மிகவும் அவசியம்.
கடந்த 1950ம் ஆண்டு இந்திய உணவு உற்பத்தி 51 மில்லியன் டன்னாக இருந்து தற்போது 209 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
இந்திய அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம், உணவு, சத்துணவு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கொள்கை மாற்றம் செய்துள்ளது. இந்தியாவில்உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, உற்பத்திக்கும் ஆராய்ச்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை சரி செய்ய வேண்டும்.
விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை மேம்பாடு ஆகியவற்றிற்காக இந்த கம்யூட்டர் யுகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்ஆலோசனைகள், பூச்சி மருந்துகள், ஆகியவற்றை இணையத் தளங்களில் வெளியிட வேண்டும்.
இன்னும் இந்தியாவில் 80 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகளாகத் தான் உள்ளனர். இந்த விவசாயிகள் பொருளாதாரம் மேம்பாடடைய தேவையானபொருளாதார உதவிகளை அளிக்க அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.
விழாவில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுகம் கலந்து கொண்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications