கோவை பெரியார் நூலகத்திலுள்ள போலி புத்தகங்களை இப்போ உள்ள ஏஐ மாடல்கள் எழுதவில்லை- எழுத்தாளர் ஜெயமோகன்
சென்னை: கோவை பெரியார் நூலகத்தில் இடம்பெற்றிருந்த அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி புத்தகங்கள், பழைய ஏஐ மாடல்களை வைத்து எழுதப்பட்டது என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார். எனவே, இது திமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டை தவெகவினர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது- இந்த புத்தகங்களை வாசித்து பார்த்தால் அவை ஆரம்ப கால ஏஐ மாடல்களை வைத்து எழுதப்பட்டதாகவே தோன்றியது. ஏனெனில் இப்போதுள்ள ஏஐ டூல்கள் கிட்டத்தட்ட மனிதர்களை போலவே எழுத திறமைபடைத்தவையாக மாறியுள்ளன. ஆரம்ப காலத்தில்தான் இஷ்டத்திற்கு எழுதுவது, டிரான்ஸ்லேஷன் போல எழுதுவது என சொதப்பின. பெரியார் நூலக புத்தகங்கள் அப்படியான ஏஐ மூலம் எழுதப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் அன்னை என்று நாம் சொல்கிறோமே அந்த தமிழன்னையை நாம் அவமானப்படுத்தியதற்கு சமம் இந்த போலி நூல்கள். இவற்றை தீயிட்டு கொளுத்தாவிட்டால் நமது எதிர்காலமே பாழாகிவிடும். இந்த போலி புத்தகத்தில் உள்ளதை நம்பி வாதங்களை எடுத்து வைப்பார்கள் இளைஞர்கள். காலப்போக்கில் அதை ஏஐயும் உள்வாங்கிக்கொள்ளும். ஏஐ உள்வாங்கிக்கொண்டு இந்த புத்தகத்திலுள்ளவற்றை நம்பினால், அதனோடு வாதித்து ஜெயிப்பது நமக்கு முடியாத விஷயமாகிவிடும். இந்த விஷயத்தில் திமுக மீது குற்றம்சாட்டுவதையோ அரசியல் பேசுவதையோ நிறுத்திவிட்டு அமைச்சர் ராஜ்மோகன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயமோகன் தெரிவித்தார்.
இதனிடையே ஜெயமோகன் பேட்டியை வைத்து, இது திமுக ஆட்சி காலத்தில் நடந்த மோசடி என தவெகவினர் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
