Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கடகம் ராசியினருக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். பணம், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவிகள் தேடி வரும். வீட்டில் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான யோகம் உண்டு. அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தானத்தில் குரு, கேது வருவதால் கோடீஸ்வர யோகம் ஏற்படும். வீட்டில் நிறைய நல்ல விஷயங்கள் அடுத்த 3, 4 மாதங்களில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மருமகள், மருமகன் வரக்கூடிய யோகம் உண்டு. பொன், பொருள், ஆபரணங்கள் சார்ந்த சேர்க்கை ஏற்படும். உங்களைப் பிடித்த பீடை ஒழியக்கூடிய காலகட்டம். நிறைய பிரச்சனைகளில் இருந்து வரும் 31 ஆம் தேதியில் இருந்து விடுதலை பெறுவீர்கள். செவ்வாய், கேது சேர்வதால் கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையையும், மனைவியாக இருந்தால் கணவர் உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்புறப் பகுதிகளில் வலி, பல் வலி, ரத்த அழுத்தம், தீ விபத்துக்கள் வீட்டில் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் வக்கிரமாக இருப்பது சொத்துக்கள் சேரும். வீடு, அடுக்குமாடி கட்டடங்கள், டியூப்ளக்ஸ் வீடு கட்டுவது போன்ற யோகம் உண்டாகும். வீட்டில் புதிய வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவீர்கள். சோஃபா செட் வாங்கி போடுவீர்கள். 10 ஆம் இடம், லாப ஸ்தானம் வலுப்பெறுவதால் வேலைகளில் பெறும் மாற்றம் உண்டாகும். உத்தியோகம், வியாபாரத்தில் குறிப்பாக வங்கிகளில் இருப்பவர்கள், நிதி சார்ந்த துறையில் இருப்பவர்கள், துணிக் கடை, பொட்டிக் வைத்திருப்பவர்களுக்கு பெரும் வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லது. தொழிலில் இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். யோகமான பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பெரும் செல்வாக்கு ஏற்படும். மன அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. காது, மூக்கு, தொண்டை, சிறு பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ரத்த பந்த உறவுகள், தாய் வழி சொந்தங்கள், உடனிருப்பவர்கள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகப்பெரிய யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ம், திடீர் சந்தோஷம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.கடகம் ராசி பலன்
பிரச்சனை தீரும்
சொத்துக்கள் சேரும்
லாபம் கொட்டும்
செல்வாக்கு
வழிபாடு