தங்கம் ஒரிஜினலா, கலப்படமா? வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 எளிய வழிகள்.. நகை வாங்குவோர் கவனத்திற்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகை வாங்கும்போது அது உண்மையான தங்கமா, அதில் எவ்வளவு தங்கம் கலந்திருக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். கடையில் வாங்கிய நகைகள் மட்டுமல்லாமல், வீட்டில் பல வருடங்களாவே வைத்திருக்கும் பழைய நகைகளின் தரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். இதற்காக நகைக்கடைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் தங்கத்தின் தரத்தை ஓரளவுக்குக் கண்டறியலாம்.

தங்கம் இயற்கையாகவே மென்மையான உலோகம்... அதனால் நகைகள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனுடன் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகங்களைக் கலக்கிறார்கள். 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தங்கம் இருக்கும். 18 கேரட்டில் 75 சதவீதமும், 24 கேரட்டில் 99.9 சதவீதமும் தங்கம் இருக்கும்.

Gold Purity Check Gold Hallmark HUID Number BIS

வீட்டிலேயே 5 டெஸ்ட்கள்

வீட்டிலேயே தங்கத்தை 5 வழிகளில் சோதனை செய்யலாம்.. முதலில் காந்தத்தை வைத்து சோதிக்கலாம்... ஒரு சின்ன காந்தத்தை நகையின் அருகில் கொண்டு செல்லும்போது உண்மையான தங்கம் ஈர்க்கப்படாது. நகை காந்தத்தால் ஈர்க்கப்பட்டால் அதில் வேறு உலோகங்கள் இருக்கலாம். ஆனால் இது மட்டுமே தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தாது.

அடுத்ததாக தண்ணீர் வைத்து டெஸ்ட் செய்யலாம்... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நகையை போட்டால் உண்மையான தங்கம் அதன் அதிக அடர்த்தி காரணமாக மூழ்கிவிடும்... வினிகர் சோதனையிலும் உண்மையான தங்கம் எளிதில் நிறம் மாறாது... செராமிக் தட்டில் நகையை உரசும்போது தங்க நிறத் தடம் ஏற்படுகிறதா என்றும் பார்க்கலாம். ஆனால் இந்த சோதனைகளால் நகையில் கீறல் அல்லது சேதம் ஏற்படலாம்.

செல்போனில் சரிபார்க்கலாம்

இதைவிட நவீனமான XRF கருவி மூலம் நகையை உருக்காமலேயே அதில் தங்கம் எவ்வளவு இருக்கிறது, மற்ற உலோகங்கள் என்னென்ன கலந்துள்ளன என்பதைப் பரிசோதிக்க முடியும்.

வீட்டு சோதனைகளைவிட நகையில் இருக்கும் ஹால்மார்க் முத்திரையைச் சரிபார்ப்பது முக்கியம். BIS முத்திரை, தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் எண், 6 இலக்க HUID அடையாள எண் ஆகியவை நகையில் இருக்க வேண்டும். உதாரணமாக, 916 என்பது 22 கேரட் தங்கத்தைக் குறிக்கும்.

BIS Care செயலியில் நகையின் HUID நம்பரை பதிவு செய்தால் அதன் தூய்மை, எடை, தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த ஆப் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் கிடைக்கிறது.

392 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

இந்தியாவில் 2000-ம் ஆண்டு விருப்ப தேர்வாக தொடங்கிய ஹால்மார்க் நடைமுறை, 2021 ஜூன் 23 முதல் 256 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது 392 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்த நகை வியாபாரிகளின் எண்ணிக்கை 43,153-லிருந்து 2,36,624 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிப் பொருட்களுக்கு ஹால்மார்க் கட்டாயமில்லை என்றாலும், 2025 செப்டம்பர் 1 முதல் அவற்றுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுகிறது. இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்களுக்கு இந்த எண் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் 1,582 நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் மற்றும் HUID எண்ணை சரிபார்ப்பதுடன், சந்தேகம் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் பரிசோதனை செய்வதே பாதுகாப்பானது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+