Gold Price Today: தங்கம் விலை இன்றும் தாறுமாறாக குறைந்தது.. ஒரே வாரத்தில் 5,280 சரிவு.. சென்னையில் ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்றும் தாறுமாறாக சரிந்துள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து நிலையில் இன்று மட்டும் ரூ.1,080 குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் சவரனுக்கு ரூ.5,280 குறைந்துள்ளது. தொடர்ந்து ஏறி வந்த தங்கம் விலை தற்போது அப்படியே சரியத் தொடங்கி இருப்பது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சுமார் ரூ.57 ஆயிரம் என்று இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உச்சம் தொட்டது. தினமும் புதிய வரலாற்று உச்சம் என தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது.

    Advertisement

    உச்சம் தொட்ட தங்கம் விலை

    நகை பிரியர்கள் கனவிலும் எதிர்பார்க்காத வகையில் ஒரே அடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. ஒரே ஆண்டுக்குள் அதாவது இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் 40,000 உயர்ந்தது பெரிய அதிர்ச்சியாக இருந்த நிலையில் அதையும் தாண்டி பிப்ரவரி மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்று உச்சம் தொட்டது.

    அதன்பிறகு தங்கம் விலை ஈரான் அமெரிக்கா போர், சர்வதேச பொருளாதார சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் பெரிய அளவில் உயராமல் சரியத் தொடங்கியது. ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சம் தொடவில்லை. கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த 5 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,760 என்ற அளவில் இருந்தது.

    Advertisement

    இன்று தாறுமாறாக சரிந்தது

    ஆனால் அதற்கு அடுத்த நாளே தங்கம் விலை திடீரென தாறுமாறாக உயரத் தொடங்கியது. அதன்பிறகு நாளுக்கு நாள் மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியது. கடந்த 24 ஆம் தேதிக்குள் சவரனுக்கு ரூ.15 ஆயிரம் அதிகரித்து ஷாக் கொடுத்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துவிடுமோ என நகை பிரியர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சரியத் தொடங்கியுள்ளது.

    நேற்று முன் தினம் சென்னையில் ஒரு ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1.16.040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது.

    Advertisement

    இன்றைய தங்கம் விலை என்ன?

    சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,080 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,280 குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    வெள்ளி விலையும் கடந்த வாரத்தை விட சற்று குறைந்து உள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960 (இன்று)
    30.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040 (நேற்று)
    29.08.2026 - ஒரு சவரன் ரூ.1.16,040
    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)

    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
    26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    Advertisement

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: The price of gold has plummeted sharply again today. Following a drop of ₹2,360 per sovereign in a single day the day before yesterday, the price has fallen by another ₹1,080 today alone. In the past week alone, the price per sovereign has decreased by ₹5,280.