கர்நாடகா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. யார் யாருக்கு எந்த துறைகள்? முழு விவரம்

  • பெங்களூர்: கர்நாடகாவில் புதிதாக 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு இன்று இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள ராமலிங்க ரெட்டி, கேஎச் முனியப்பா, யுடி காதர் உள்பட சிலரது இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை? என்பது தொடர்பான முழு விவரம் வருமாறு:

    Advertisement

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் இறுதியில் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். கர்நாடகா அமைச்சரவையில் முதல்வரை சேர்த்து மொத்தம் 34 பேர் இடம்பெறலாம்.

    Advertisement

    ஆனால் டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதனால் அமைச்சரவையில் 20 காலியிடங்கள் இருந்தன. ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 19 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்னும் ஒரு இடம் காலியாக உள்ளது.

    இதையடுத்து புதிதாக அமைச்சர்களாக பதவியேற்ற 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. யார் யாருக்கு எந்தெந்த இலாகா ஒதுக்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் முதல்வர் டிகே சிவக்குமார் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் புதிதாக பதவியேற்ற 19 பேருக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களில் சிலரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி கர்நாடகா அமைச்சர்களின் இலாகா விவரங்கள் வருமாறு:

    Advertisement

    * ஜமீர் அகமது கான் - வீட்டு வசதித்துறை
    * லட்சுமண் சவதி - கூட்டுறவுத்துறை
    * ருத்ரப்பா லமானி - சர்க்கரை மற்றும் ஜவுளித்துறை
    * சிவராஜ் தங்கடகி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கன்னடா - கலாசார துறை
    * ரகுமூர்த்தி - பழங்குடியினர் நலத்துறை
    * அஜய் சிங் - சிறிய நீர்ப்பாசனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
    * செலுவராயசாமி - பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை
    * மது பங்காரப்பா - பள்ளி கல்வித்துறை
    * பசவராஜ் ராய ரெட்டி - உயர் கல்வித்துறை

    * சிவலிங்கே கவுடா - கலால் துறை
    * புட்டரங்கசெட்டி - கால்நடை மற்றும் பட்டு வளர்ச்சி துறை
    * விஜயானந்தா - சிறிய தொழில்துறை
    * சந்தோஷ் லாட் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை
    * கேஎஸ் பசவந்தப்பா - இந்து அறநிலையத்துறை, மீன்வளம், துறைமுக துறை
    * எஸ்எஸ் மல்லிகார்ஜூன் - கனிமவளத்துறை
    * ரிஸ்வான் அர்சத் - உணவு மற்றும் பொது விநியோகம் - நுகர்வோர் விவகாரத்துறை
    * நரேந்திரசாமி - விவசாயத்துறை
    * எச்சி பாலகிருஷ்ணா - நகராட்சி நிர்வாக துறை
    * நாகேந்திரா - திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை என புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்ற 19 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    * உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்த கேஎச் முனியப்பாவிற்கு அவரது இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவர் சமூக நலத்துறை அமைச்சராக இனி செயல்பட உள்ளார். கேஎச் முனியப்பான் உணவு மற்றும் பொது விநியோகத்துறை ரிஸ்வான் அர்சத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    * அதேபோல் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ராமலிங்க ரெட்டியிடம் இருந்து அந்த துறை பறிக்கப்பட்டு செலுவராயசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ராமலிங்க ரெட்டிக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    * அமைச்சராக இருக்கும் யுடி காதருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையுடன் கூடுதலாக சிறுபான்மையினர் நலத்துறை, ஹஜ் மற்றும் வக்ஃப் துறை வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    * முதல்வர் டிகே சிவக்குமாரிடம் நிதி உள்பட ஏராளமான துறைகள் உள்ளன. அதன்படி அமைச்சரவை விவகாரம், ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை, உளவுத்துறை, தகவல் தொடர்பு, சட்டத்துறை, நீதி மற்றும் மனி உரிமைகள், சட்டசபை விவகாரம், டவுன் மற்றும் கவுண்ட்டி திட்டமிடல், பிடிஏ, பிஎம்ஆர்டிஏ பகுதிக்குட்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த துறை மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படாத துறைகள் உள்ளன. இவர்கள் தவிர ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் 10 பேரின் துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    * ஜி பரமேஸ்வர் - துணை முதல்வர் பதவியுடன் வருவாய் மற்றும் விளையாட்டு துறை
    * கேஜே ஜார்ஜ் - மின்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை
    * எம்பி பாட்டீல் - பெரிய மற்றும் நடுத்தர வர்த்தகம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை
    * சதீஷ் ஜார்கிகோளி - பொதுப்பணித்துறை
    * கிருஷ்ணபைரே கவுடா - பெங்களூர் நகர வள்ர்ச்சி துறை

    Advertisement

    * பிரியங்க் கார்கே (மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் ) - போலீஸ் அமைச்சர் (உளவுத்துறையை தவிர)
    * ஈஸ்வர் காண்ட்ரே - ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்
    * யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்) - நகர மேம்பாட்டு துறை
    * பைரதி சுரேஷ் - போக்குவரத்து துறை
    * சரண் பிரகாஷ் பாட்டீல் - மருத்து கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகியோரின் இலாகாவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Karnataka Cabinet: Nineteen new ministers were sworn in in Karnataka, and their portfolios have been allocated today. While an official announcement regarding this is expected shortly, key information has already emerged concerning which portfolios have been assigned to whom.