கடலில் மூழ்குபவர்களை மீட்க ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது? - சென்னை ஐகோர்ட் எழுப்பிய கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலைகளில் சிக்கி கடலில் மூழ்குபவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்த கூடாது? என மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற ஒன்றிய, மாநில ஏஜென்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனத் தெரிவித்துள்ள ஐகோர்ட் கடலில் சிக்குவோரை மீட்பதற்காக வகுத்துள்ள வழிமுறைகளை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுத் தர ஆணையிட்டுள்ளது.

Madras High Court Questions Why Helicopters Are Not Used for Sea Rescue Operations

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த கே. கோபால் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், தனது மகன் இரண்டு நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்குச் சென்றதாகவும், அவர்கள் கடலுக்குள் இறங்கியபோது, ​​ராட்சத அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதில், தனது மகனைக் காப்பாற்ற முடியாத நிலையில், மகனின் நண்பர்கள் இரண்டு பேரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட தனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, தேடுதல் பணிகளின் முறைகள் மற்றும் அதில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள் குறித்த விவரங்களை வழங்குமாறு சென்னை பெருநகர காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

​இதையடுத்து, இந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், இதற்கென ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை இருப்பதாகவும், மாநில ஏஜென்சிகள் தவிர, தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணையத்தின் ஒரு பிரிவான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலை அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், மீட்புப் பணிகளின் போது இந்த ஏஜென்சிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. கடந்த ​2022-ஆம் ஆண்டு தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய மற்றும் மாநில ஏஜென்சிகள் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்" என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள மெரினா மற்றும் பிற கடற்கரைகள், அத்துடன் மற்ற மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் கடலில் மூழ்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்த கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கடல் சார் ஒருங்கிணைப்பு அமைப்பு ​மற்றும் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு ஆணையத்தின் பொறுப்பு பிரதிநிதியை தாமாக முன் வந்து வழக்கில் சேர்த்தனர்.

​கடலுக்குச் செல்பவர்களை மீட்பதற்காக அந்த ஆணையம் வகுத்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+