கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்கள்.. கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸ்! ஆனால்.. யார் பெயரும் இல்லை!

  • பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மாடு தேடிச் சென்ற கர்நாடகாவில் வசித்து வந்த மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையில் இது தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் கர்நாடக போலீசார். 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அதில் யார் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் நேற்று காலை ஹனூர் வனச்சரக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் நான்கு பேர் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் நான்கு பேரும் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறிய வனத்துறையினர் பதிலுக்கு வனத்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு ஹனூர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உறவினர்கள் விவசாய சங்கங்கள் ஹனூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி சூறையாடினார்.

    Advertisement

    இந்த நிலையில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு நியாயம் கேட்டு வனத்துறையினர் விவசாயிகள் மீது படுகொலை நடத்தியதாக கூறி நேற்று முதல் தற்போது வரை பல்வேறு அமைப்புகள் விவசாய சங்கங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர் அப்படியே அவர்கள் மீது தவறு இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று முன்தினம் காலை முதல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை குண்டுக்கட்டாக காவல் நிலையத்திற்குள் தூக்கி சென்றனர். இதை அடுத்து பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.

    Advertisement

    தமிழக சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தீர்மானம் நிறைவேற்ற கோரியும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இந்த நிலையில் கர்நாடகா சட்டசபையிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை வழக்காக பதிவு செய்திருக்கின்றனர் கர்நாடக போலீசார் .அதே நேரத்தில் அந்த எஃப்ஐஆர்-ல் யார் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Karnataka police register a murder case after three Tamil men were shot dead, but the FIR names no accused.