சென்னை டூ மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. அடியோடு மாறிடுச்சு பாருங்க! எப்போது முடியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் எளிதாகச் சென்று வரவும் திட்டமிடப்பட்ட மிக முக்கியமான திட்டம் தான் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலத் திட்டம்.

சுமார் ₹5,570 கோடி மதிப்பீட்டில், 20.6 கி.மீ தொலைவுக்கு இந்த பிரம்மாண்ட பறக்கும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்த இத்திட்டம், புதிய இரட்டை அடுக்கு வடிவமைப்போடு மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது தமிழக அரசின் நிதி உதவி மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

automobile

தற்போதைய களப் பணிகள் என்னென்ன?

தற்போது கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை (NH 48) நடுப்பகுதிகளில் தூண்கள் அமைப்பதற்கான ஆழ்துளையிடும் பணிகள் மற்றும் தூண்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

சென்னையின் பிரதான சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மேம்பாலத்திற்குத் தேவையான கான்கிரீட் கர்டர்கள் மற்றும் தட்டுகள் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரத்யேக யார்டில் தயார் செய்யப்பட்டு, இரவு நேரங்களில் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகின்றன.

பகலில் நெரிசல் இல்லாத 5 மணி நேரங்கள் மற்றும் நள்ளிரவில் 6 மணி நேரங்கள் என தற்போது தினமும் சுமார் 11 மணி நேரம் பணிகள் நடக்கின்றன. பணிகளை இன்னும் விரைவுபடுத்த பணிக்காலத்தை தினமும் 16 மணி நேரமாக நீட்டிக்க போக்குவரத்து காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இரட்டை அடுக்கு மேம்பாலம் - எப்படி இயங்கும்?

இந்த மேம்பாலத்தின் 20.6 கி.மீ பாதையில், இரண்டு வகையான அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன:

சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயிலில் தொடங்கி (நேப்பியர் பாலம் அருகில்) கூவம் ஆற்றங்கரை வழியாக கோயம்பேடு வரை இரட்டை அடுக்காக அமைகிறது.

இது முழுக்க முழுக்க சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கண்டெய்னர் லாரிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இது சென்னை மாநகர பொதுமக்கள், பைக்குகள், கார்கள் மற்றும் உள்ளூர் பேருந்துகளின் பயன்பாட்டிற்கானது.

இதற்கு எந்தவித சுங்கக் கட்டணமும் கிடையாது. பொதுமக்கள் ஏறி, இறங்க வசதியாக காமராஜர் சாலை, சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, ஸ்பர்டேங்க் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட 13 இடங்களில் ஏறும், இறங்கும் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் சந்திப்பு வரையிலான பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே ஒற்றை அடுக்கு மேம்பாலமாக (Single Tier) நீட்டிக்கப்பட்டு, சென்னை பைபாஸ் சாலையுடன் இணைகிறது.

எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்?

தொடக்கத்தில் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஆற்றுப்படுகையில் மண் பலப்படுத்தும் சவால்கள், மழைக்கால பாதிப்புகள் மற்றும் நகரின் கடுமையான போக்குவரத்து நெரிசலால் கட்டுமானப் பணிகளின் காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டது. தற்போதைய அதிகாரப்பூர்வ இலக்கின்படி, இத்திட்டம் நவம்பர் 2027-க்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என NHAI திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் முடிவடையும் போது, துறைமுகத்திற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் நகருக்குள் நுழையாமல் நேரடியாகப் பறக்கும் சாலை வழியாகச் சென்றுவிடும். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை மற்றும் கோயம்பேடு பகுதிகளில் நிலவும் பல மணி நேர போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+