30 வயதில் ஓய்வு! 14 வீடுகள் வாங்கிய சீன இளைஞருக்கு அடித்த அதிர்ச்சி திருப்பம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தினமும் 18 மணி நேரம் வேலை பார்த்து வந்த சீன இளைஞர் ஒருவர், தனது 30 வயதிலேயே வேலையை விட்டுவிட்டு ஓய்வுபெற்றுள்ளார். இதற்காக அவர் செய்த முதலீடு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சுமார் ரூ.2.8 கோடி செலவில் 14 பழைய வீடுகளை வாங்கி, அவற்றை வாடகைக்கு விட்டதன் மூலம் ஆண்டுக்கு ரூ.29 லட்சத்துக்கும் மேல் வருமானம் கிடைக்கும் நிலையை உருவாக்கியுள்ளார். ஆனால், இப்போது அந்த முதலீட்டு முறையையே மாற்ற முடிவு செய்துள்ளார். அப்படி என்ன நடந்தது?

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஃபேன் ஜுன்ஜி. வேலைக்காக ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகருக்குச் சென்ற இவர், ஆன்லைனில் மருத்துவ பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில், வேலை பார்த்து வந்துள்ளார்.

Chinese Man Retirement Rental Income Investment Strategy

சேல்ஸ் டீமில் இருந்தால், தினமும் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலைக்காக அதிக நேரத்தை செலவிட்டதால், ஓய்வெடுக்கவும் தனக்கு பிடித்தபடி வாழவும் போதிய நேரம் கிடைக்கவில்லை. இதனால், இனி இப்படி தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்று முடிவு செய்தார். வேலைக்குச் செல்லாமலேயே வருமானம் கிடைக்கும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தார்.

14 பழைய வீடுகள்

சாங்ஷா நகரில் புதிய வீடுகளின் விலை அதிகமாக இருந்ததால், குறைந்த விலையில் கிடைக்கும் பழைய வீடுகளை வாங்கி வாடகைக்கு விடலாம் என்று திட்டமிட்டார். குறிப்பாக, மருத்துவமனைக்கு அருகில் வீடு வாங்கினால் அங்கு வருபவர்கள், வேலை செய்பவர்கள் வாடகைக்கு எடுப்பார்கள் என்று கணக்கு போட்டார்.

இதன்படி, 2023-ம் ஆண்டு முதல் வீடுகளை வாங்கத் தொடங்கினார். அடுத்த 2 வருடங்களில் மொத்தம் 14 பழைய வீடுகளை வாங்கியுள்ளார். இதற்காக 20 லட்சம் யுவானுக்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.2.8 கோடியாகும்.

சாங்ஷா நகரில் உள்ள சியாங்யா மருத்துவமனைக்கு அருகிலுள்ள வீடுகளையே அவர் தேர்வு செய்தார்.. காரணம், அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தேவைப்படுவோர் அதிகம் இருப்பார்கள் என்பதே அவரது மாஸ்டர் கணக்காகும்.

வீடுகளை வாங்கிய பிறகு, அதில் தேவையான ரிப்பேர்களை பார்த்து, வாடகைக்கு விடுவதற்கு தயார் செய்தார்.. ஒருவேளை, அடிக்கடி பழுது ஏற்பட்டால் உடனே சரிசெய்யும் வகையில் சில பொருட்களையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தார்.

ஆண்டுக்கு ரூ.29 லட்சம்

அவர் வாங்கிய வீடுகளில், ஒரு வீட்டை வாங்குவதற்கு 1.5 லட்சம் யுவான் செலவாகியுள்ளது. அந்த வீட்டை மாதம் 1,700 யுவானுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இன்னொரு வீட்டை வாங்கி, வரி, தரகு கட்டணம், பழுதுபார்ப்புச் செலவு உள்ளிட்டவற்றையும் சேர்த்து 3.1 லட்சம் யுவான் செலவிட்டுள்ளார். அந்த வீட்டை மாதம் 2,200 யுவானுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இப்படி வாங்கிய 14 வீடுகளில் 11 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 2.1 லட்சம் யுவான் வருமானம் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.29 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும். இதனால் இனி வேலைக்கு போகாமலேயே தனது வருமானத்தில் வாழ முடியும் என்ற நிலையை அடைந்தார். இதையடுத்து, 30 வயதிலேயே தனது வேலையை விட்டுவிட்டு ஓய்வுபெற்றுள்ளார்.

வீடுகள் வாங்குவதை நிறுத்தியது ஏன்?

வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டால் தொடர்ந்து பணம் கிடைக்கும் என்று நினைத்த அவருக்கு, அதில் சில சிக்கல்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய வேண்டும். சில நேரங்களில் வாடகைக்கு ஆள் கிடைக்காமல் வீடு காலியாக இருக்கும். அதற்கும் செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும், வீட்டு வரி, தரகர் கட்டணம் எனத் தொடர்ந்து பணம் செலவாகிறது. இதனால் வாடகையாகக் கிடைக்கும் முழுத் தொகையும் கையில் லாபமாகத் தங்குவதில்லை.

இதையடுத்து, அக்டோபர் 26-ம் தேதி இனி புதிதாக வீடுகள் வாங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே வாங்கிய வீடுகளை வைத்துக்கொண்டு, இனி வேறு வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக, லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளார். மேலும், முதலீட்டு நிதிகளிலும் பணத்தை போட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் வீடுகளைப் போலவே தொடர்ந்து வருமானம் கிடைக்கும் என்றும், வீடுகளை பராமரிப்பது போன்ற வேலைகள் இருக்காது என்றும் கருதுகிறார்.

லாவோஸில் புதிய வாழ்க்கை

இப்போது லாவோஸ் நாட்டில் தங்கியபடி பல இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார். அன்றாட செலவுகளுக்கும், அவசர தேவைகளுக்கும் தனியாக பணம் வைத்துள்ளார். அடுத்த 1 முதல் 3 வருடங்களுக்குத் தேவைப்படும் பணத்தை பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் நஷ்டமும் ஏற்படலாம். ஆனால், ஒரு வீட்டை விற்றுப் பணமாக்க பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். பங்குகளை பொறுத்தவரை தேவைப்படும் நேரத்தில் விற்று பணத்தை பெறுவது எளிது என்பதால், இந்த மாற்றத்தை செய்ய முடிவு செய்துள்ளார்.

முதலீடு, வருமானம்

தனது முதலீட்டு முறையை மற்றவர்களும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. ஒவ்வொருவரின் வருமானம், செலவு, குடும்பச் சூழல் ஆகியவற்றை பொறுத்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமும் 18 மணி நேரம் வேலை பார்த்த வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக 14 வீடுகளை வாங்கி, 30 வயதிலேயே ஓய்வுபெற்றவர் இப்போது அந்த வீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் தாண்டி வேறு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். இவ்வளவு வீடுகள் இருந்தும் அவற்றை பராமரிப்பதிலுள்ள சிரமங்களால் தனது முடிவை மாற்றியிருப்பதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது.

30 வயதில் 14 வீடுகள் வாங்கி ஓய்வுபெற்றது ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அந்த வீடுகளை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்களால் இப்போது முதலீட்டு முறையையே மாற்றியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+