தவெக போற ரூட் தப்பு.. விஜய் தான் நடித்த படத்தை பார்க்க வேண்டும்.. அடி பொளந்த வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணி உருவாகி சில மாதங்களே ஆகிறது. அதற்குள் ஏராளமான சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. விசிக, காங்கிரஸ் நிர்வாகிகளே தவெக அரசை தினசரி விமர்சிக்கிறார்கள். தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் தவெக செல்லும் பாதை சரியில்லை. விஜய் தான் நடித்த அந்த படத்தை மீண்டும் பார்க்க வேண்டுமென வீரபாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், "கம்யூனிஸ்ட்களுக்கு பல இடங்களில் வாக்கு குறைவாக உள்ளது. அது மக்கள் அளிக்கிற வாக்குகள் தானே. நாங்கள் இடைத்தேர்தலில் 1,000 வாக்குகள் பெற்றோம். அது மக்கள் அளித்த வாக்கு இல்லையா. அந்த வாக்குக்குரிய மதிப்பு எங்கே. உழைக்கின்ற, எளிய 1,000 மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அந்த 1,000 கேலிக்குரியதா.

tvk-in-wrong-route-vijay-should-watch-his-movie-said-veerapandiyan

சர்க்கார் படத்தை விஜய் பார்க்க வேண்டும்

நண்பர்களே ஒரே ஒரு வாக்குக்கு போராடும் கதாபாத்திரமாக முதலமைச்சர் ஒரு படத்தில் நடித்தார். வெறும் ஒரு வாக்கு தான். அந்தப் படம் முழுவதும் ஒரு வாக்கு தான். மிகவும் அற்புதமான தொலைநோக்கு பார்வை அது. வாக்கு என்பது சாதாரணமல்ல. நீண்ட நெடிய பயணத்தில் அது கிடைத்துள்ளது. நமது கதிபோக்கை நாமே தீர்மானித்து கொள்வது வாக்குச்சீட்டு. ஜெர்மனில் நெசவு தொழிலாளிகள் தொடங்கி பிரான்ஸ் போராட்டம் வரை உலகம் முழுவதும் நம் கரங்களில் ரத்த கறை படிந்துள்ளது.

இதை விலை பேச முடியாது. இதற்கு விலை இல்லை. விலை பேசுவதும், விலை போவதும் குற்றம். தங்கள் கதிபோக்கை தாங்களே தீர்மானிக்கும் உச்ச வடிவம் வாக்குச்சீட்டு. ஒரு வாக்குக்காக சகோதரர் விஜய் ஒரு படத்தில் நடித்தார். அது நல்ல திரைப்படம். மீண்டும் முதலமைச்சர் விஜய் அந்தப் படத்தை பார்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஒரே ஒரு வாக்குக்காக நடித்தார். ஆனால் 13 கோடி பேரின் வாக்கை அப்பட்டமாக நீக்கி, ஜனநாயக படுகொலை செய்ததை அவர் கண்டிக்கவில்லை.

தவெக மீது நம்பிக்கையில்லை

ஒரு வார்த்தை அதை கண்டிக்கிறேன் என ஏன் அவரால் சொல்ல முடியவில்லை. நாட்டின் முதல்வரல்லவா அவர். 1.70 கோடி பேர் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் எந்த தொண்டு சேவையும் செய்யாமல் திடீரென அரசியலுக்கு வந்திருக்கலாம். எல்லோருக்கும் அது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் வாக்களித்தது மக்கள். ஆளுநர் தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென முதல் குரல் கொடுத்தது இடதுசாரிகள்" என்றார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், "உழைக்கும் மக்கள் கோரிக்கை அப்படியே உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க தவெக தயங்குகிறது. லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்கிறார்கள். அவர்களைப்பற்றி அரசு யோசிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். தவெக அரசு செல்லும் திசை நம்பிக்கை அளிக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்த திசையில் பயணிக்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+