பிஞ்சு குழந்தையின் அழுகை.. அடுத்த நாளே அனைத்து ஊழியர்களுக்கு Work From Home கொடுத்த சிஇஓ!
இந்தியாவில் லாக்டவுன் காலத்தில் பெரும் வசதியாக இருந்த Work From Home தற்போது கார்ப்ரேட் உலகின் முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. சில நிறுவனங்கள் இன்றளவும் ஊழியர்களின் நலன் கருத்தி தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தாலும், பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் கொடுப்பதில் மிகவும் கராரான நடைமுறையை வைத்துள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு சில மேனேஜர்கள் ஊழியர்கள் அவசர நிலையிலும் WFH அளிக்காமல் அலுவலம் வந்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்
இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மையான நிலையை உணர்த்தும் வரையில் கரியர் கவுன்சிலரான சைமன் இங்காரி எக்ஸ் தளத்தில் செய்த பதவி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சைமன் இங்காரி பதிவில், ஒரு ஊழியர் தனது மனைவி உடல்நிலை சரியில்லாததால் தற்காலிகமாக வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதி கோரினார். ஆனால் நிறுவனக் கொள்கை மற்றும் அலுவலக பணி கட்டாயம் என்று கூறி நிறுவனத்தின் சிஇஓ நிராகரித்தார். பணிக்கும் - பர்சனல் வாழ்க்கைக்கும் இடையில் சிக்கிய அந்த ஊழியர், எந்த வழியும் இல்லாமல் தவித்தார்.
வேலை இழக்க நேரிடுமோ என்ற பயத்துடன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அவரை நெருக்கியது. இத்தகைய சூழல்கள் பல ஊழியர்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கிறது.
இந்த நிலையில் அந்த ஊழியர் ஒரு நாள் வேலைக்கு வராத காரணத்தால் சிஇஓ அந்த ஊழியரை போனில் அழைத்துள்ளார். இந்த போன் கால்-ஐ ஊழியர் தான் எடுப்பார் என நினைத்த சிஇஓ-க்கு ஷாக், எடுத்தத்து அந்த ஊழியரின் ஐந்து வயது மகள். ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி தொடங்கிய இந்த குழந்தை, அடுத்த சில நொடியில் இதயத்தை நொருங்க வைத்துள்ளது.
அந்த குழந்தை, தந்தையின் பாஸ்-யிடம் "அப்பாவை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதியுங்கள். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நானும் பள்ளிக்கு செல்லவில்லை. அப்பா என்னையும் அம்மாவையும் பார்த்துக் கொள்ளட்டும்" என்று குழந்தைக்கே உரிய மெல்லிய குரலில் கேட்டாள்.
குழந்தை பேசியதை கேட்டு நொருங்கி போன சிஇஓ, பேச்ச முடியாமல் திணறினார். அந்த குழந்தையின் குரல், நிறுவனத்தின் கொள்கைகளை உடைத்தெறிந்தது, மனித உணர்வை அந்த சிஇஓ-க்கு நினைவூட்டியது. அந்த ஒரு போன் கால், அலுவலக விதிகளை மட்டுமல்ல, மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது.
குழந்தையின் பேச்சு, மாற்றிய கொள்கை
அடுத்த நாளே நிறுவனம் தனது ஊழியர்களின் பணி கொள்கையை மாற்றியது. அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்து பணி செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. ஒரு குடும்பத்தின் தடுமாற்றம், முழு நிறுவனத்தின் அணுகுமுறையை மாற்றியமைத்தது. இந்த மாற்றம் பல ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தது. அவசர காலங்களில் கூட ஊழியர்களுக்கு இடம் அளிக்காத நிறுவனம் எதை வெல்லப்போகிறது என்ற கேள்வி அனைவருக்கும் வந்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் நமக்கு ஒரு முக்கிய பாடத்தை கற்றுத் தருகின்றன. வேலை கொள்கைகள் வெறும் உற்பத்தித் திறன் அல்லது இலக்குகளைப் பற்றியவை மட்டுமல்ல. மனிதர்களையும் அவர்களின் உண்மையான வாழ்க்கைச் சூழலையும் புரிந்துகொண்டு இயக்க கூடியதாக இருக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லாத குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, குழந்தையின் படிப்பு, மன அழுத்தம் ஆகியவை எல்லாம் பணி வாழ்க்கையுடன் இணைந்தவை. 9-6 பணிக்கு பின்பு நிர்வாகம் ஊழியர்களை கூடுதலாகவும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வற்புறுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கூடாது என்ற விதியை கட்டாயப்படுத்துவது எந்த வகையில் ஏற்க முடியும்.
இதேபோல் தனியார் நிறுவனத்தில் ஓவர்டைம், இரவு நேர பணி, வீக்கென்ட் ஷிப்ட் போன்றவற்றுக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பது கிடையாது.












Click it and Unblock the Notifications