நாளை காலை 10 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆளுநர் மாளிகை
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் நாளை காலை 10 மணிக்கு மக்கள் மாளிகையில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வை அறிவிப்பினை ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ளார். மேலும் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை இடம் உறுதியாகியுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விசிகவுக்கும் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.

எனினும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை. இதனால் விஜய் அமைச்சரவை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நாளை காலை 10 மணியளவில் முதல்வர் விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆளுநர் மாளிகை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவர் அமைச்சர்களாக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ள நிலையில், விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக கூறியுள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படுமா? இல்லையா என்பது நாளை 10 மணிக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் கலந்து கொள்கிறார்.
-
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications